Wednesday 6 December 2023

அகவல் சொல் பிரித்த வடிவம்



1


அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி


3


ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்பெருஞ்ஜோதி


5


கம முடிமேல் ஆரண முடிமேல்   ஆக நின்று ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி


7


க நிலைப் பொருள்ஆய்ப் பர நிலைப் பொருள்ஆய்   அகம் அறப் பொருந்திய அருட்பெருஞ்ஜோதி


9


னம் இன்று இக பரத்து இரண்டின் மேல் பொருளாய்   ஆனல் இன்று ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி


11


ரை மனம் கடந்த ஒரு பெரு வெளி மேல்   அரைசு செய்து ஓங்கும் அருட்பெருஞ்ஜோதி


13


க்கமும் உணர்ச்சியும் ஒளிதரும் ஆக்கையும்   ஆக்கமும் அருளிய அருட்பெருஞ்ஜோதி


15


ல்லைஇல் பிறப்பு எனும் இரும்கடல் கடத்தி என்   அல்லலை நீக்கிய அருட்பெருஞ்ஜோதி


17


றா நிலை மிசை ஏற்றி என் தனக்கே   ஆறு ஆறு காட்டிய அருட்பெருஞ்ஜோதி


19


யமும் திரிபும் அறுத்து எனது உடம்பினுள்   ஐயமும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி


21


ன்றுஎன இரண்டுஎன ஒன்றிரண்டுஎன இவை   அன்றுஎன விளங்கிய அருட்பெருஞ்ஜோதி


23


தாது உணர்ந்திட ஒளி அளித்து எனக்கே   ஆதாரம் ஆகிய அருட்பெருஞ்ஜோதி


25


வியம் ஆதி ஓர் ஆறும் தவிர்த்த பேர்   அவ் இயல் வழுத்தும் அருட்பெருஞ்ஜோதி


27


திருநிலைத் தனிவெளி சிவவெளி எனும் ஓர்   அருள்வெளிப் பதி வளர் அருட்பெருஞ்ஜோதி


29


சுத்த சன்மார்க்க சுகத் தனி வெளி எனும்   அத் தகைச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி


31


சுத்த மெய் ஞான சுக உதய வெளி எனும்   அத்துவிதச் சபை அருட்பெருஞ்ஜோதி


33


தூய கலாந்த சுகம் தரு வெளி எனும்   ஆய சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி


35


ஞான யோகாந்த நடத் திருவெளி எனும்   ஆனி இல் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி


37


விமல போதாந்த மா மெய்ப்பொருள் வெளி எனும்   அமல சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி


39


பெரிய நாதாந்தப் பெருநிலை வெளி எனும்   அரிய சிற்றம்பலத்து அருட்பெருஞ்ஜோதி


41


சுத்த வேதாந்தத் துரிய மேல் வெளி எனும்   அத் தகு சிற்சபை அருட்பெருஞ்ஜோதி


43


சுத்த சித்தாந்த சுகப் பெரு வெளி எனும்   அத் தனிச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி


45


தகர மெய் ஞான தனிப்பெரு வெளி எனும்   அகரநிலைப் பதி அருட்பெருஞ்ஜோதி


47


தத்துவ அதீத தனிப் பொருள் வெளி எனும்   அத் திரு அம்பலத்து அருட்பெருஞ்ஜோதி


49


சத்து சித்து ஆனந்தத் தனிப் பரவெளி எனும்   அச்சு இயல் அம்பலத்து அருட்பெருஞ்ஜோதி


51


சாகாக் கலை நிலை தழைத்திடு வெளி எனும்   ஆகாயத்து ஒளிர் அருட்பெருஞ்ஜோதி


53


காரண காரியம் காட்டிடு வெளி எனும்   ஆரணச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி


55


ஏகம் அனேகம் எனப் பகர் வெளி எனும்   ஆகமச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி


57


வேத  ஆகமங்களின் விளைவுகட்கு எல்லாம்   ஆதாரம் ஆம் சபை அருட்பெருஞ்ஜோதி


59


என்று ஆதிய சுடர்க்கு இயல் நிலைஆய், அது   அன்றுஆம் திருச்சபை அருட்பெருஞ்ஜோதி


61


சமயம் கடந்த தனிப்பொருள் வெளியாய்   அமையும் திருச்சபை அருட்பெருஞ்ஜோதி


63


முச்சுடர்களும் ஒளி முயங்குற அளித்துஅருள்   அச் சுடர் ஆம் சபை அருட்பெருஞ்ஜோதி


65


துரியமும் கடந்த சுக பூரணம் தரும்   அரிய சிற்றம்பலத்து அருட்பெருஞ்ஜோதி


67


எவ் வகைச் சுகங்களும் இனிது உற அளித்த அருள்   அவ் வகைச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி


69


இயற்கை உண்மையதுஆய் இயற்கை இன்பமும்ஆம்   அயர்ப்புஇலாச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி


71


சாக்கிர அதீதத் தனிவெளியாய் நிறைவு   ஆக்கிய சிற்சபை அருட்பெருஞ்ஜோதி


73


சுட்டுதற்கு அரிதாம் சுகஅதீத வெளி எனும்   அட்டமேல் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி


75


நவம் தவிர் நிலைகளும் நண்ணும் ஓர் நிலையாய்   அவம் தவிர் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி


77


உபய பக்கங்களும் ஒன்று எனக் காட்டிய   அபய சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி


79


சேகரம் ஆம் பல சித்தி நிலைக்கு எலாம்   ஆகரம் ஆம்சபை அருட்பெருஞ்ஜோதி


81


மனம் ஆதிகட்கு அரிய மதஅதீத வெளி ஆம்   அனாதி சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி


83


ஓதி நின்று உணர்ந்து உணர்ந்து உணர்தற்கு அரிது ஆம்   ஆதி சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி


85


வாரமும் அழியா வரமும் தரும் திரு   ஆரமுதுஆம் சபை அருட்பெருஞ்ஜோதி


87


இழியாப் பெருநலம் எல்லாம் அளித்த அருள்   அழியாச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி


89


கற்பம் பல பல கழியினும் அழிவு உறா   அற்புதம் தரும் சபை அருட்பெருஞ்ஜோதி


91


எனைத்தும் துன்பு இலா இயல் அளித்து எண்ணிய   அனைத்தும் தரும் சபை அருட்பெருஞ்ஜோதி


93


பாணிப்பு இலதாய்ப் பரவினோர்க்கு அருள்புரி   ஆணிப்பொன் அம்பலத்து அருட்பெருஞ்ஜோதி


95


எம் பலம் எனத் தொழுது ஏத்தினோர்க்கு அருள்புரி   அம்பலத்து ஆடல்செய் அருட்பெருஞ்ஜோதி


97


தம் பர ஞான சிதம்பரம் எனும் ஓர்   அம்பரத்து ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி


99


எச் சபை பொது என இயம்பினர் அறிஞர்கள்   அச் சபை இடம் கொளும் அருட்பெருஞ்ஜோதி


101


வாடுதல் நீக்கிய மணிமன்று இடையே   ஆடுதல் வல்ல அருட்பெருஞ்ஜோதி


103


நாடகத் திருச்செயல் நவிற்றிடும் ஒரு பேர்   ஆடகப் பொது ஒளிர் அருட்பெருஞ்ஜோதி


105


கற்பனை முழுவதும் கடந்து ஒளி தரும் ஓர்   அற்புதச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி


107


ஈன்ற நல் தாயினும் இனிய பெரும் தயவு   ஆன்ற சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி


109


இன்பு உறு நான் உளத்து எண்ணியாங்கு எண்ணியாங்கு   அன்பு உறத் தரு சபை அருட்பெருஞ்ஜோதி


111


எம்மையும் என்னைவிட்டு இறையும் பிரியாது   அம்மை அப்பனும் ஆம் அருட்பெருஞ்ஜோதி


113


பிரிவு உற்று அறியாப் பெரும் பொருள் ஆய் என்   அறிவுக்கு அறிவுஆம் அருட்பெருஞ்ஜோதி


115


சாதியும் மதமும் சமயமும் காணா   ஆதி அநாதி ஆம் அருட்பெருஞ்ஜோதி


117


தநு கரணாதிகள் தாம் கடந்து அறியும் ஓர்   அநுபவம் ஆகிய அருட்பெருஞ்ஜோதி


119


உனும் உணர்வு உணர்வாய் உணர்வு எலாம் கடந்த   அநுபவ அதீத அருட்பெருஞ்ஜோதி


121


பொது உணர்வு உணரும்போது அலால் பிரித்தே   அது எனில் தோன்றா அருட்பெருஞ்ஜோதி


123


உளவினில் அறிந்தால் ஒழிய மற்று அளக்கின்   அளவினில் அளவா அருட்பெருஞ்ஜோதி


125


என்னையும் பணிகொண்டு இறவாவரம் அளித்து   அன்னையில் உவந்த அருட்பெருஞ்ஜோதி


127


ஓதி ஓதாமல் உறவு எனக்கு அளித்த   ஆதி ஈறு இல்லா அருட்பெருஞ்ஜோதி


129


படி அடி வான் முடி பற்றினும் தோற்றா   அடி முடி எனும் ஓர் அருட்பெருஞ்ஜோதி


131


பவனத்தின் அண்டப் பரப்பின் எங்கு எங்கும்   அவனுக்கு அவன்ஆம் அருட்பெருஞ்ஜோதி


133


திவள் உற்ற அண்டத் திரளின் எங்கு எங்கும்   அவளுக்கு அவள்ஆம் அருட்பெருஞ்ஜோதி


135


மதன் உற்ற அண்ட வரைப்பின் எங்கு எங்கும்   அதனுக்கு அதுஆம் அருட்பெருஞ்ஜோதி


137


எப்பாலும்ஆய் வெளிஎல்லாம் கடந்து மேல்   அப்பாலும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி


139


வல்லதுஆய் எல்லாம் ஆகி எல்லாமும்   அல்லதுஆய் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி


141


எப்பொருள் மெய்ப்பொருள் என்பர் மெய்கண்டோர்   அப்பொருள் ஆகிய அருட்பெருஞ்ஜோதி


143


தாங்கு அகிலஅண்ட சரஅசர நிலைநின்று   ஆங்கு உற விளங்கும் அருட்பெருஞ்ஜோதி


145


சத்தர்கள் எல்லாம் தழைத்திட அகம்புறத்து   அத்திசை விளங்கும் அருட்பெருஞ்ஜோதி


147


சத்திகள் எல்லாம் தழைக்க எங்குஎங்கும்   அத்தகை விளங்கும் அருட்பெருஞ்ஜோதி


149


முந்து உறும் ஐந்தொழி மூர்த்திகள் பலர்க்கும்   ஐந்தொழில் அளிக்கும் அருட்பெருஞ்ஜோதி


151


பெரிதினும் பெரிது ஆய் சிறிதினும் சிறிது ஆய்   அரிதினும் அரிது ஆம் அருட்பெருஞ்ஜோதி


153


காட்சியும் காணாக் காட்சியும் அதுதரும்   ஆட்சியும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி


155


இன்பு உறு சித்திகள் எல்லாம் புரிக என்று   அன்புடன் எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி


157


இறவா வரம் அளித்து என்னை மேல் ஏற்றிய   அற ஆழிஆம் தனி அருட்பெருஞ்ஜோதி


159


நான் அந்தம் இல்லா நலம் பெற எனக்கே   ஆனந்தம் நல்கிய அருட்பெருஞ்ஜோதி


161


எண்ணிய எண்ணி யாங்கு இயற்றுக என்று எனை   அண்ணி உள் ஓங்கும் அருட்பெருஞ்ஜோதி


163


மேயினை மெய்ப்பொருள், விளங்கினை, நீ அது   ஆயினை, என்று அருள் அருட்பெருஞ்ஜோதி


165


எண்ணில், செழுந்தேன் இனிய தெள் அமுது என   அண்ணித்து இனிக்கும் அருட்பெருஞ்ஜோதி


167


சிந்தையில் துன்பு ஒழி சிவம் பெறுக எனத் தொழில்   ஐந்தையும் எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி


169


எங்கு எங்கு இருந்து உயிர் ஏது எது வேண்டினும்   அங்கு அங்கு இருந்து அருள் அருட்பெருஞ்ஜோதி


171


சகமுதல் புறப்புறம் தங்கிய அகப்புறம்   அகம் புறம் முற்றும்ஆம் அருட்பெருஞ்ஜோதி


173


சிகரமும் கரமும் சேர்தனி கரமும்   கரமும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி


175


உப ரசவேதியின் உபயமும் பரமும்   அபரமும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி


177


மந்தணம் இது என மறுஇலா மதியால்   அந்தணர் வழுத்தும் அருட்பெருஞ்ஜோதி


179


எம் புயக்கனி என எண்ணுவார் இதய   அம்புயத்து அமர்ந்த அருட்பெருஞ்ஜோதி


181


செடி அறுத்தே திட தேகமும் போகமும்   அடியருக்கே தரும் அருட்பெருஞ்ஜோதி


183


துன்புஅறுத்து ஒருசிவ துரிய சுகம் தனை   அன்பருக்கே தரும் அருட்பெருஞ்ஜோதி


185


பொது அது சிறப்பு அது புதியது பழயது என்று   அது அது ஆய்த் திகழ் அருட்பெருஞ்ஜோதி


187


சேதனப் பெருநிலை திகழ்தரும் ஒருபரை   ஆதனத்து ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி


189


ஓமயத் திரு உரு உவப்புடன் அளித்து எனக்கு   ஆமயத் தடைதவிர் அருட்பெருஞ்ஜோதி


191


எப்படி எண்ணியது என் கருத்து இங்கு, எனக்கு   அப்படி அருளிய அருட்பெருஞ்ஜோதி


193


எத்தகை விழைந்தன என்மனம் இங்கு, எனக்கு   அத்தகை அருளிய அருட்பெருஞ்ஜோதி


195


இங்கு உறத் திரிந்து உளம் இளையா வகை எனக்கு   அம் கையில் கனியாம் அருட்பெருஞ்ஜோதி


197


பார் உய்யப் புரிக எனப் பணித்து எனக்கு அருளி என்   ஆர் உயிர்க்கு உள் ஒளிர் அருட்பெருஞ்ஜோதி


199


தேவி உற்று ஒளிர்தரு திரு உரு உடன் எனது   ஆவியில் கலந்து ஒளிர் அருட்பெருஞ்ஜோதி


201


எவ்வழி மெய்வழி என்ப வேதஆகமம்   அவ்வழி எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி


203


வையமும் வானமும் வாழ்த்திட எனக்கு அருள்   ஐ அறிவு அளித்த அருட்பெருஞ்ஜோதி


205


சாமாறு அனைத்தும் தவிர்த்து இங்கு எனக்கே   ஆமாறு அருளிய அருட்பெருஞ்ஜோதி


207


சத்தியம் ஆம் சிவசத்தியை ஈந்து எனக்கு   அத்திறல் வளர்க்கும் அருட்பெருஞ்ஜோதி


209


சாவா நிலை இது, தந்தனம் உனக்கே   ஆ வா என அருள் அருட்பெருஞ்ஜோதி


211


சாதியும் மதமும் சமயமும் பொய் என   ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி


213


மயர்ந்திடேல் சிறிதும் மனம் தளர்ந்து அஞ்சேல்   அயர்ந்திடேல் என்று அருள் அருட்பெருஞ்ஜோதி


215


தேசு உறத் திகழ் தரு திருநெறிப் பொருள் இயல்   ஆசு அறத் தெரித்த அருட்பெருஞ்ஜோதி


217


காட்டிய உலகு எலாம் கருணையால் சித்தியின்   ஆட்டியல் புரியும் அருட்பெருஞ்ஜோதி


219


எம் குலம் எம் இனம் என்பது தொண்ணூற்றாறு   அங்குலம் என்று அருள் அருட்பெருஞ்ஜோதி


221


எம் மதம் எம் இறை என்ப உயிர்த் திரள்   அம் மதம் என்று அருள் அருட்பெருஞ்ஜோதி


223


கூறிய கருநிலை குலவிய கீழ் மேல்   ஆறு இயல் என உரை அருட்பெருஞ்ஜோதி


225


எண் தர முடியாது இலங்கிய பற்பல   அண்டமும் நிறைந்து ஒளிர் அருட்பெருஞ்ஜோதி


227


சார் உயிர்க்கு எல்லாம் தாரகம் ஆம் பரை   ஆர் உயிர்க்கு உயிராம் அருட்பெருஞ்ஜோதி


229


வாழி நீடூழி வாழி என்று ஓங்கு பேர்   ஆழியை அளித்த அருட்பெருஞ்ஜோதி


231


மாய்ந்தவர் மீட்டும் வருநெறி தந்து இதை   ஆய்ந்திடு என்று உரைத்த அருட்பெருஞ்ஜோதி


233


எச்சம் நினக்கு இலை எல்லாம் பெறுக என்று   அச்சம் தவிர்த்த என் அருட்பெருஞ்ஜோதி


235


நீடுக! நீயே நீள் உலகு அனைத்தும் நின்று   ஆடுக! என்ற என் அருட்பெருஞ்ஜோதி


237


முத்திறல் வடிவமும் முன்னியாங்கு எய்துறும்   அத்திறல் எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி


239


மூவகைச் சித்தியின் முடிபுகள் முழுவதும்   ஆ(ம்)வகை எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி


241


கரும சித்திகளின் கலை பல கோடியும்   அரசு உற எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி


243


யோக சித்திகள் வகை உறு பல கோடியும்   ஆக என்று எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி


245


ஞான சித்தியின் வகை நல் விரிவு அனைத்தும்   ஆனி இன்று எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி


247


புடையுறு சித்தியின் பொருட்டே முத்தியை   அடைவது என்று அருளிய அருட்பெருஞ்ஜோதி


249


முத்தி என்பது நிலை முன் உறு சாதனம்   அத்தகவு என்ற என் அருட்பெருஞ்ஜோதி


251


சித்தி என்பது நிலை சேர்ந்த அநுபவம்   அத்திறல் என்ற என் அருட்பெருஞ்ஜோதி


253


ஏக சிற்சித்தியே இயல் உற அனேகம்   ஆகியது என்ற என் அருட்பெருஞ்ஜோதி


255


இன்ப சித்தியின் இயல் ஏகம் அனேகம்   அன்பருக்கு என்ற என் அருட்பெருஞ்ஜோதி


257


எட்டு இரண்டு என்பன இயலும் முற்படி என   அட்ட நின்று அருளிய அருட்பெருஞ்ஜோதி


259


இப்படி கண்டனை இனி உறு படி எலாம்   அப்படியே எனும் அருட்பெருஞ்ஜோதி


261


படி முடி கடந்தனை, பார்! இது பார்! என   அடி முடி காட்டிய அருட்பெருஞ்ஜோதி


263


ஜோதியுள் ஜோதியின் சொருபமே அந்தம்   ஆதி என்று அருளிய அருட்பெருஞ்ஜோதி


265


இந்த சிற்ஜோதியின் இயல் உரு ஆதி   அந்தம் என்று அருளிய அருட்பெருஞ்ஜோதி


267


ஆதியும் அந்தமும் அறிந்தனை, நீயே   ஆதி என்று அருளிய அருட்பெருஞ்ஜோதி


269


நல் அமுது என் ஒரு நா உளம் காட்டி என்   அல்லலை நீக்கிய அருட்பெருஞ்ஜோதி


271


கற்பகம் என் உளம்கை தனில் கொடுத்தே   அற்புதம் இயற்று எனும் அருட்பெருஞ்ஜோதி


273


கதிர்நலம் என் இரு கண்களில் கொடுத்தே   அதிசயம் இயற்று எனும் அருட்பெருஞ்ஜோதி


275


அருள் ஒளி என் தனி அறிவினில் விரித்தே   அருள் நெறி விளக்கு எனும் அருட்பெருஞ்ஜோதி


277


பரை ஒளி என் மனப் பதியினில் விரித்தே   அரசு அது இயற்று எனும் அருட்பெருஞ்ஜோதி


279


வல்லப சத்திகள் வகை எலாம் அளித்து எனது   அல்லலை நீக்கிய அருட்பெருஞ்ஜோதி


281


ஆர் இயல் அகம்புறம்அகப்புறம்புறப்புறம்   ஆர் அமுதுஎனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி


283


சூரிய சந்திர ஜோதியுள் ஜோதி என்று   ஆரியர் புகழ்தரும் அருட்பெருஞ்ஜோதி


285


பிறிவு ஏது இனி, உனைப் பிடித்தனம், உனக்கு நம்   அறிவே வடிவு, எனும் அருட்பெருஞ்ஜோதி


287


எஞ்சேல் உலகினில் யாதொன்று பற்றியும்   அஞ்சேல் என்று அருள் அருட்பெருஞ்ஜோதி


289


மாண்டு உழலா வகை வந்து இளம் காலையே   ஆண்டு கொண்டு அருளிய அருட்பெருஞ்ஜோதி


291


பற்றுகள் அனைத்தையும் பற்று அறத் தவிர்த்து எனது   அற்றமும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி


293


சமயம் குலம் முதல் சார்பு எலாம் விடுத்த   அமயம் தோன்றிய அருட்பெருஞ்ஜோதி


295


வாய்தற்கு உரித்து எனும் மறை ஆகமங்களால்   ஆய்தற்கு அரிய அருட்பெருஞ்ஜோதி


297


எல்லாம் வல்ல சித்து எனக்கு அளித்து எனக்கு உனை   அல்லாது இலை எனும் அருட்பெருஞ்ஜோதி


299


நவை இலா உளத்தில் நாடிய நாடிய   அவை எலாம் அளிக்கும் அருட்பெருஞ்ஜோதி


301


கூற்று உதைத்து என்பால் குற்றமும் குணம் கொண்டு   ஆற்றல் மிக்கு அளித்த அருட்பெருஞ்ஜோதி


303


நன்று அறிவு அறியா நாயினேன் தனையும்   அன்று வந்து ஆண்ட அருட்பெருஞ்ஜோதி


305


நாயினும் கடையேன் ஈயினும் இழிந்தேன்   ஆயினும் அருளிய அருட்பெருஞ்ஜோதி


307


தோத்திரம் புகலேன் பாத்திரம் அல்லேன்   ஆத்திரம் அளித்த அருட்பெருஞ்ஜோதி


309


எச் சோதனைகளும் இயற்றாது எனக்கே   'அச்சோ' என்று அருள் அருட்பெருஞ்ஜோதி


311


ஏறா நிலை நடு ஏற்றி என் தனை, ஈண்டு   ஆறாறு கடத்திய அருட்பெருஞ்ஜோதி


313


தாபத் துயரம் தவிர்த்து, உலகு உறும் எலா   ஆபத்தும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி


315


மருள் பகை தவிர்த்து எனை வாழ்வித்து எனக்கே   அருள்குரு ஆகிய அருட்பெருஞ்ஜோதி


317


உருவமும் அருவமும் உபயமும் ஆகிய   அருள் நிலை தெரித்த அருட்பெருஞ்ஜோதி


319


இருள் அறுத்து என் உளத்து எண்ணியாங்கு அருளி   அருள் அமுது அளித்த அருட்பெருஞ்ஜோதி


321


தெருள் நிலை இது எனத் தெருட்டி, என் உளத்து இருந்து   அருள் நிலை காட்டிய அருட்பெருஞ்ஜோதி


323


பொருட் பதம் எல்லாம் புரிந்து மேல் ஓங்கிய   அருட் பதம் அளித்த அருட்பெருஞ்ஜோதி


325


உருள் சகடு ஆகிய உளம் சலியா வகை   அருள் வழி நிறுத்திய அருட்பெருஞ்ஜோதி


327


வெருள் மன, மாயை வினை இருள் நீக்கி, உள்   அருள் விளக்கு ஏற்றிய அருட்பெருஞ்ஜோதி


329


சுருள் விரிவு உடை மனச் சுழல் எலாம் அறுத்தே   அருள் ஒளி நிரப்பிய அருட்பெருஞ்ஜோதி


331


விருப்போடு இகல் உறு வெறுப்பும் தவிர்த்தே   அருட்பேறு அளித்த அருட்பெருஞ்ஜோதி


333


அருட்பேர் தரித்து உலகு அனைத்தும் மலர்ந்திட   அருட்சீர் அளித்த அருட்பெருஞ்ஜோதி


335


உலகு எலாம் பரவ என் உள்ளத்து இருந்தே   அலகு இலா ஒளி செய் அருட்பெருஞ்ஜோதி


337


விண்ணின் உள் விண்ஆய், விண் நடு விண்ஆய்   அண்ணி நிறைந்த அருட்பெருஞ்ஜோதி


339


விண் உறு விண்ஆய் விண்நிலை விண்ஆய்   அண்ணி வயங்கும் அருட்பெருஞ்ஜோதி


341


காற்றின் உள் காற்றாய்க் காற்று இடைக் காற்றுஆய்   ஆற்றலின் ஓங்கும் அருட்பெருஞ்ஜோதி


343


காற்று உறு காற்றாய்க் கால்நிலைக் காற்றுஆய்   ஆற்ற விளங்கும் அருட்பெருஞ்ஜோதி


345


அனலின் உள் அனல்ஆய் அனல்நடு அனல்ஆய்   அனல் உற விளங்கும் அருட்பெருஞ்ஜோதி


347


அனல் உறும் அனல்ஆய் அனல்நிலை அனல்ஆய்   அனல் உற வயங்கும் அருட்பெருஞ்ஜோதி


349


புனலின் உள் புனல்ஆய்ப் புனல் இடைப் புனல்ஆய்   அனை என வயங்கும் அருட்பெருஞ்ஜோதி


351


புனல் உறு புனல்ஆய்ப் புனல் நிலைப் புனல்ஆய்   அனை எனப் பெருகும் அருட்பெருஞ்ஜோதி


353


புவியின் உள் புவிஆய்ப் புவிநடுப் புவிஆய்   அவை தர வயங்கும் அருட்பெருஞ்ஜோதி


355


புவி உறு புவிஆய்ப் புவிநிலைப் புவிஆய்   அவை கொள விரிந்த அருட்பெருஞ்ஜோதி


357


விண்நிலை சிவத்தின் வியன்நிலை அளவி   அண் உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி


359


வளிநிலை சத்தியின் வளர்நிலை அளவி   அளிஉற அமைத்த அருட்பெருஞ்ஜோதி


361


நெருப்பது நிலை நடு நிலை எலாம் அளவி   அருப்பிட வகுத்த அருட்பெருஞ்ஜோதி


363


நீர்நிலை திரைவளர் நிலைதனை அளவி   ஆர்வு உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


365


புவிநிலை சுத்தமாம் பொற்பதி அளவி   அவை உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


367


மண்ணினில் திண்மையை வகுத்து அதில் கிடக்கை   அண் உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி


369


மண்ணினில் பொன்மை வகுத்து அதில் ஐம்மையை   அண் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


371


மண்ணினில் ஐம்பூ வகுத்து அதில் ஐந்திறம்   அண் உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி


373


மண்ணினில் நாற்றம் வகுத்து அது பல்வகை   அண் உறப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி


375


மண்ணினில் பற்பல வகை கரு நிலை இயல்   அண் உறப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி


377


மண்ணினில் ஐந்து இயல் வகுத்து அதில் பல்பயன்   அண் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


379


மண்ணிடை அடிநிலை வகுத்து அதில் பல்நிலை   அண் உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி


381


மண்ணில் ஐந்தைந்து வகையும் கலந்துகொண்டு   அண் உறப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி


383


மண் இயல் சத்திகள் மண் செயல் சத்திகள்   அண் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


385


மண் உருச் சத்திகள் மண்கலைச் சத்திகள்   அண் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


387


மண் ஒளிச் சத்திகள் மண் கருச் சத்திகள்   அண் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


389


மண் கணச் சத்திகள் வகை பல பலவும்   அண் கொள அமைத்த அருட்பெருஞ்ஜோதி


391


மண் நிலைச் சத்தர்கள் வகை பல பலவும்   அண் உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி


393


மண்கரு உயிர்த்தொகை வகைவிரி பலவா   அண்கொள அமைத்த அருட்பெருஞ்ஜோதி


395


மண்ணினில் பொருள் பல வகை விரி வெவ்வேறு   அண் உறப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி


397


மண் உறு நிலைபல வகுத்து அதில் செயல் பல   அண் உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி


399


மண்ணிடைப் பக்குவம் வகுத்து அதில் பயன் பல   அண் உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி


401


மண் இயல் பல பல வகுத்து அதில் பிறவும்   அண் உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி


403


நீரினில் தண்மையும் நிகழ் ஊரு(று) ஒழுக்கமும்   ஆர் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


405


நீரினில் பசுமையை நிறுத்தி அதில் பல   ஆர் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


407


நீரிடைப் பூஇயல், நிகழ் உறு திறஇயல்   ஆர்தர வகுத்த அருட்பெருஞ்ஜோதி


409


நீரினில் சுவை நிலை நிரைத்து, அதில் பல்வகை   ஆர் உறப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி


411


நீரினில் கருநிலை நிகழ்த்திய பற்பல   ஆர் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


413


நீரிடை நான்கு இயல் நிலவுவித்து, அதில் பல   ஆர்தர வகுத்த அருட்பெருஞ்ஜோதி


415


நீரிடை அடிநடு நிலைஉற வகுத்து, அனல்   ஆர்தரப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி


417


நீரிடை ஒளி இயல், நிகழ்பல குண இயல்   ஆர்தர வகுத்த அருட்பெருஞ்ஜோதி


419


நீரிடைச் சத்திகள் நிகழ்வகை பலபல   ஆர்தர வகுத்த அருட்பெருஞ்ஜோதி


421


நீரினில் சத்தர்கள் நிறைவகை உறைவகை   ஆர்தரப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி


423


நீரிடை உயிர்பல நிகழ் உறு பொருள்பல,   ஆர் உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி


425


நீரிடை நிலைபல, நிலை உறு செயல்பல,   ஆர்கொள வகுத்த அருட்பெருஞ்ஜோதி


427


நீர் உறு பக்குவ நிறை உறு பயன்பல   ஆர் உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி


429


நீர் இயல் பலபல நிறைத்து, அதில் பிறவும்   ஆர்தரப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி


431


தீயினில் சூட்டு இயல், சேர்தரச் செலவு இயல்,   ஆய் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


433


தீயினில் வெண்மைத் திகழ் இயல் பலவா   ஆய் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


435


தீயிடைப் பூ எலாம், திகழுறு திறம் எலாம்,   ஆய் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


437


தீயிடை ஒளியே திகழுற அமைத்து, அதில்   ஆய் பல வகுத்த அருட்பெருஞ்ஜோதி


439


தீயிடை அருநிலை, திருநிலை, கருநிலை,   ஆய் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


441


தீயிடை மூஇயல் செறிவித்து, அதில்பல   ஆய் வகை அமைத்த அருட்பெருஞ்ஜோதி


443


தீயிடை நடுநிலை, திகழ்நடு நடுநிலை   ஆய் உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி


445


தீயிடைப் பெரும்திறல் சித்திகள் பலபல   ஆய் உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி


447


தீயிடைச் சித்துகள் செப்புறும் அனைத்தும்   ஆய் உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி


449


தீயிடைச் சத்திகள் செறிதரு சத்தர்கள்   ஆய் பல வகுத்த அருட்பெருஞ்ஜோதி


451


தீயிடை உயிர்பல திகழுறு பொருள்பல   ஆய் வகை அமைத்த அருட்பெருஞ்ஜோதி


453


தீயிடை நிலை பல, திகழ் செயல் பல, பயன்   ஆய் பல, வகுத்த அருட்பெருஞ்ஜோதி


455


தீயினிற் பக்குவம் சேர்குணம் இயல்குணம்   ஆய் பல வகுத்த அருட்பெருஞ்ஜோதி


457


தீயிடை உருக்குஇயல், சிறப்புஇயல், பொதுஇயல்   ஆய் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


459


தீஇயல் பலபல செறித்து, அதில் பலவும்   ஆய் உறப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி


461


காற்றிடை அசை இயல், கலை இயல், உயிர் இயல்   ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ்ஜோதி


463


காற்றிடைப் பூஇயல் கருதுறு திற இயல்   ஆற்றலின் வகுத்த அருட்பெருஞ்ஜோதி


465


காற்றினில் ஊறு இயல் காட்டுறு பலபல   ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ்ஜோதி


467


காற்றினில் பெருநிலை, கருநிலை, அளவு இல   ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ்ஜோதி


469


காற்றிடை ஈர் இயல் காட்டி அதில் பல   ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ்ஜோதி


471


காற்றினில் இடைநடு கடைநடு அகம் புறம்   ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ்ஜோதி


473


காற்றினில் குணம்பல, கணம்பல, வணம்பல   ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ்ஜோதி


475


காற்றிடைச் சத்திகள் கணக்குஇல, உலப்புஇல   ஆற்றவும் அமைத்த அருட்பெருஞ்ஜோதி


477


காற்றிடைச் சத்தர்கள் கணிதம் கடந்தன   ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ்ஜோதி


479


காற்றிடை உயிர்பல, கதிபல, கலைபல   ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ்ஜோதி


481


காற்றிடை நால்நிலைக் கருவிகள் அனைத்தையும்   ஆற்று உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


483


காற்றிடை உணர் இயல் கருதுஇயல் ஆதிய   ஆற்று உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


485


காற்றிடைச் செயல் எலாம் கருதிய பயன் எலாம்   ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ்ஜோதி


487


காற்றினில் பக்குவக் கதி எலாம் விளைவித்து   ஆற்றலின் வகுத்த அருட்பெருஞ்ஜோதி


489


காற்றினில் காலம் கருதுறு வகை எலாம்   ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ்ஜோதி


491


காற்று இயல் பலபல கணித்து அதில் பிறவும்   ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ்ஜோதி


493


வெளியிடைப் பகுதியின் விரிவு இயல் அணைவு இயல்   அளிஉற அமைத்த அருட்பெருஞ்ஜோதி


495


வெளியிடைப் பூ எலாம் வியப்புறு திறன் எலாம்   அளிஉற அமைத்த அருட்பெருஞ்ஜோதி


497


வெளியினில் ஒலிநிறை வியன்நிலை அனைத்தும்   அளிஉற அமைத்த அருட்பெருஞ்ஜோதி


499


வெளியிடைக் கருநிலை, விரிநிலை, அருநிலை   அளிகொள வகுத்த அருட்பெருஞ்ஜோதி


501


வெளியிடை முடிநிலை விளங்குற வகுத்தே   அளிபெற விளக்கும் அருட்பெருஞ்ஜோதி


503


வெளியினில் சத்திகள் வியப்பு உற, சத்தர்கள்   அளிஉற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


505


வெளியிடை ஒன்றே விரித்து, அதில் பற்பல   அளிஉற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


507


வெளியிடைப் பலவே விரித்து, அதில் பற்பல   அளிதர அமைத்த அருட்பெருஞ்ஜோதி


509


வெளியிடை உயிர் இயல் வித்து இயல் சித்து இயல்   அளிபெற அமைத்த அருட்பெருஞ்ஜோதி


511


வெளியின் அனைத்தையும் விரித்து அதில் பிறவும்   அளிஉற அமைத்த அருட்பெருஞ்ஜோதி


513


புறநடுவொடு, கடை புணர்ப்பித்து, ஒருமுதல்   அறம் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


515


புறம்தலை நடுவொடு புணர்ப்பித்து ஒருகடை   அறம்பெற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


517


அகப்புற நடு கடை அணைவால் புறமுதல்   அகப்பட வகுத்த அருட்பெருஞ்ஜோதி


519


அகப்புற நடு முதல் அணைவால் புறக்கடை   அகப்பட அமைத்த அருட்பெருஞ்ஜோதி


521


கருது அகம் நடுவொடு கடை அணைந்து அகம்முதல்   அருள் உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி


523


தணிஅகம் நடுவொடு தலை அணைந்து அகக்கடை   அணியுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


525


அகம் நடு, புறக்கடை அணைந்து, அகப் புறமுதல்   அகம் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


527


அகநடு புறத்தலை அணைந்து அகப் புறக்கடை   அகல் இடை வகுத்த அருட்பெருஞ்ஜோதி


529


அகநடு அதனால் அகப்புற நடுவை   அகமற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


531


அகப்புற நடுவால் அணிபுற நடுவை   அகப்பட அமைத்த அருட்பெருஞ்ஜோதி


533


புறநடு அதனால் புறப்புற நடுவை   அறம் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


535


புகல் அரும் அகண்ட பூரண நடுவால்   அகநடு வகுத்த அருட்பெருஞ்ஜோதி


537


புறப்புறக் கடைமுதல் புணர்ப்பால் புறப்புற   அறக்கணம் வகுத்த அருட்பெருஞ்ஜோதி


539


புறத்து இயல் கடைமுதல் புணர்ப்பால் புறத்தூறும்   அறக்கணம் வகுத்த அருட்பெருஞ்ஜோதி


541


அகப்புறக் கடை முதல் அணைவால் அக்கணம்   அகத்து உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


543


அகக்கடை முதல் புணர்ப்பு அதனால் அகக்கணம்   அகத்திடை வகுத்த அருட்பெருஞ்ஜோதி


545


வானிடைக் காற்றும், காற்றிடை நெருப்பும்,   ஆன் அற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


547


நெருப்பிடை நீரும், நீரிடைப் புவியும்,   அருப்பிட வகுத்த அருட்பெருஞ்ஜோதி


549


நீர்மேல் நெருப்பும், நெருப்பின்மேல் உயிர்ப்பும்   ஆர்வு உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


551


புனல்மேல் புவியும், புவிமேல் புடைப்பும்,   அனல்மேல் வகுத்த அருட்பெருஞ்ஜோதி


553


பகுதி வான் வெளியில் படர்ந்த மாபூத   அகல் வெளி வகுத்த அருட்பெருஞ்ஜோதி


555


உயிர்வெளி இடையே உரைக்க அரும் பகுதி   அயவெளி வகுத்த அருட்பெருஞ்ஜோதி


557


உயிர்வெளி அதனை, உணர்கலை வெளியில்   அயல் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


559


கலைவெளி அதனைக், கலப்பு அறு சுத்த   அலர்வெளி வகுத்த அருட்பெருஞ்ஜோதி


561


சுத்தநல் வெளியைத் துரிசு அறு பரவெளி   அத்துஇடை வகுத்த அருட்பெருஞ்ஜோதி


563


பரவெளி அதனைப் பரம்பர வெளியில்   அரசு உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


565


பரம்பர வெளியைப் பராபர வெளியில்   அரம்தெற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


567


பராபர வெளியைப் பகர் பெரு வெளியில்   அராவு அற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


569


பெருவெளி அதனைப் பெரும் சுகவெளியில்   அருள் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


571


குணம் முதல் கருவிகள் கூடிய பகுதியில்   அணைவு உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


573


மனம் முதல் கருவிகள் மன்னுயிர் வெளியிடை   அனம் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


575


காலமே முதலிய கருவிகள் கலைவெளி   ஆலுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


577


துரிசு அறு கருவிகள் சுத்தநல் வெளியிடை   அரசு உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


579


இவ்வெளி எல்லாம் இலங்க, அண்டங்கள்   அவ் வயின் அமைத்த அருட்பெருஞ்ஜோதி


581


ஓங்கிய அண்டம் ஒளிபெற முச்சுடர்   ஆங்கிடை வகுத்த அருட்பெருஞ்ஜோதி


583


சிருட்டித் தலைவரைச் சிருட்டி அண்டங்களை   அருள்திறல் வகுத்த அருட்பெருஞ்ஜோதி


585


காவல்செய் தலைவரைக் காவல் அண்டங்களை   ஆ வகை அமைத்த அருட்பெருஞ்ஜோதி


587


அழித்தல்செய் தலைவரை அவர் அண்டங்களை   அழுக்கற அமைத்த அருட்பெருஞ்ஜோதி


589


மறைத்திடு தலைவரை மற்றும் அண்டங்களை   அறத்தொடு வகுத்த அருட்பெருஞ்ஜோதி


591


தெளிவுசெய் தலைவரைத் திகழும் அண்டங்களை   அளிபெற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


593


விந்துவாம் சத்தியை விந்தின் அண்டங்களை   அம்திறல் வகுத்த அருட்பெருஞ்ஜோதி


595


ஓங்கார சத்திகள் உற்ற அண்டங்களை   ஆங்கு ஆக அமைத்த அருட்பெருஞ்ஜோதி


597


சத்தத் தலைவரைச் சாற்றும் அண்டங்களை   அத்தகை வகுத்த அருட்பெருஞ்ஜோதி


599


நாதம் ஆம் பிரமமும் நாத அண்டங்களை   ஆதரம் வகுத்த அருட்பெருஞ்ஜோதி


601


பகர் பரா சத்தியைப் பதியும் அண்டங்களும்   அகமற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


603


பரசிவ பதியைப் பரசிவ அண்டங்களை   அரசுற அமைத்த அருட்பெருஞ்ஜோதி


605


எண் இல் பல் சத்தியை எண் இல் அண்டங்களை   அண் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


607


அளவு இல் பல் சத்தரை அளவு இல் அண்டங்களை   அளவு உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


609


உயிர்வகை அண்டம் உலப்பு இல எண் இல   அயர்வு உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


611


களவுஇல கடல்வகை கங்குஇல கரைஇல   அளவுஇல வகுத்த அருட்பெருஞ்ஜோதி


613


கடல் அவை அனைத்தும் கரைஇன்றி நிலை உற   அடல் அனல் அமைத்த அருட்பெருஞ்ஜோதி


615


கடல்களும் மலைகளும் கதிகளும் நதிகளும்   அடல் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


617


கடல் இடைப் பல்வளம் கணித்து அதில் பல் உயிர்   அடல் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


619


மலை இடைப் பல்வளம் வகுத்து அதில் பல் உயிர்   அலைவு உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


621


ஒன்றினில் ஒன்றே, ஒன்றிடை ஆயிரம்   அன்றுஅற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


623


பத்திடை ஆயிரம், பகர் அதில் கோடி   அத்து உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


625


நூற்று இடை இலக்கம் நுவல் அதில் அனந்தம்   ஆற்றிடை வகுத்த அருட்பெருஞ்ஜோதி


627


கோடியில் அனந்த கோடி, பல்கோடி   ஆடு உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


629


வித்து இயல் ஒன்றாய் விளைவு இயல் பலவா   அத்தகை அமைத்த அருட்பெருஞ்ஜோதி


631


விளைவு இயல் அனைத்தும் வித்து இடை அடங்க   அளவுசெய்து அமைத்த அருட்பெருஞ்ஜோதி


633


வித்தும் பதமும் விளை உபகரிப்பும்   அத்திறல் அமைத்த அருட்பெருஞ்ஜோதி


635


வித்திடை முளையும் முளையிடை விளைவும்   அத்தக அமைத்த அருட்பெருஞ்ஜோதி


637


வித்தினுள் வித்தும், வித்து அதில் வித்தும்,   அத்திறம் வகுத்த அருட்பெருஞ்ஜோதி


639


விளைவின் உள் விளைவும் விளைவு அதில் விளைவும்   அளை உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


641


முளை அதில் முளையும் முளையின் உள் முளையும்   அளைதர அமைத்த அருட்பெருஞ்ஜோதி


643


வித்திடைப் பதமும் பதத்திடை வித்தும்   அத்து உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி


645


பதம் அதில் பதமும் பதத்தின் உள் பதமும்   அதிர்வு அற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


647


ஒற்றுமை வேற்றுமை உரிமைகள் அனைத்தும்   அற்று என வகுத்த அருட்பெருஞ்ஜோதி


649


பொருள் நிலை உறுப்பியல் பொதுவகை முதலிய   அருள் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


651


உறவினல் உறவும் உறவினில் பகையும்   அறன் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


653


பகையினில் பகையும் பகையினில் உறவும்   அகைவுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


655


பாதியும் முழுதும் பதிசெயும் அந்தமும்   ஆதியும் வகுத்த அருட்பெருஞ்ஜோதி


657


துணையும் நிமித்தமும் துலங்கு அதின் அதுவும்   அணைவுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


659


உருஅதில் உருவும் உருவின் உள் உருவும்   அருள் உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி


661


அருவின் உள் அருவும் அருஅதில் அருவும்   அருள் இயல் அமைத்த அருட்பெருஞ்ஜோதி


663


கரணமும் இடமும் கலைமுதல் அணையும் ஓர்   அரண்நிலை வகுத்த அருட்பெருஞ்ஜோதி


665


உருவதில் அருவும் அரு அதில் உருவும்   அருள் உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி


667


வண்ணமும் வடிவும் மயங்கிய வகை பல   அண் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


669


சிறுமையில் சிறுமையும் சிறுமையில் பெருமையும்   அறிதர வகுத்த அருட்பெருஞ்ஜோதி


671


பெருமையில் பெருமையும் பெருமையில் சிறுமையும்   அருள் நிலை வகுத்த அருட்பெருஞ்ஜோதி


673


திண்மையில் திண்மையும், திண்மையில் நேர்மையும்   அண்மையின் வகுத்த அருட்பெருஞ்ஜோதி


675


மென்மையில் மென்மையும் மென்மையில் வன்மையும்   அன்மை அற்று அமைத்த அருட்பெருஞ்ஜோதி


677


அடியினுள் அடியும் அடியிடை அடியும்   அடி உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


679


நடுவினுள் நடுவும் நடுவு அதின் நடுவும்   அடர்வு உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி


681


முடியினுள் முடியும் முடியினில் முடியும்   அடர்தர அமைத்த அருட்பெருஞ்ஜோதி


683


அகப்பூ அகஉறுப்பு ஆக்க அதற்கு அவை   அகத்தே வகுத்த அருட்பெருஞ்ஜோதி


685


புறப்பூ புறத்தில் புனைஉரு ஆக்கிட   அறத்துடன் வகுத்த அருட்பெருஞ்ஜோதி


687


அகப்புறப்பூ அகப்புறஉறுப்பு இயற்றிட   அகத்துஇடை வகுத்த அருட்பெருஞ்ஜோதி


689


புறப்புறப் பூ அதில், புறப்புற உறுப்பு உற,   அறத்திடை வகுத்த அருட்பெருஞ்ஜோதி


691


பாரிடை வேர்வையில் பையிடை முட்டையில்   ஆர் உயிர் அமைக்கும் அருட்பெருஞ்ஜோதி


693


ஊர்வன பறப்பன உறுவன நடப்பன   ஆர்வு உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


695


அசைவு இல அசைவு உள ஆருயிர்த் திரள்பல   அசல் அற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


697


அறிவு ஒரு வகைமுதல் ஐ வகை அறுவகை   அறிதர வகுத்த அருட்பெருஞ்ஜோதி


699


வெவ்வேறு இயலொடு வெவ்வேறு பயன் உற   அவ்வாறு அமைத்த அருட்பெருஞ்ஜோதி


701


சித்திர விசித்திர சிருட்டிகள் பலபல   அத்தகை வகுத்த அருட்பெருஞ்ஜோதி


703


பெண்ணினுள் ஆணும் ஆணினுள் பெண்ணும்   அண் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


705


பெண்ணினுள் மூன்றும் ஆணினுள் இரண்டும்   அண் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


707


பெண்ணிடை நான்கும் ஆணிடை மூன்றும்   அண் உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி


709


பெண் இயல் ஆணும் ஆண் இயல் பெண்ணும்   அண் உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி


711


பெண் திறல் புறத்தும் ஆண் திறல் அகத்தும்   அண்டு உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


713


பெண் இயல் மனமும் ஆண் இயல் அறிவும்   அண் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


715


தனித்தனி வடிவினும் தக்க ஆண் பெண் இயல்   அனைத்து உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி


717


உனற்கு அரும் உயிர் உள, உடல் உள, உலகு உள   அனைத்தையும் வகுத்த அருட்பெருஞ்ஜோதி


719


ஓவுறா எழுவகை உயிர் முதல் அனைத்தும்   ஆ வகை வகுத்த அருட்பெருஞ்ஜோதி


721


பைகளில் முட்டையில் பாரினில் வேர்வினில்   ஐபெற அமைத்த அருட்பெருஞ்ஜோதி


723


தாய் கருப் பையினுள் தங்கிய உயிர்களை   ஆய்வு உறக் காத்து அருள் அருட்பெருஞ்ஜோதி


725


முட்டைவாய்ப் பயிலும் முழு உயிர்த் திரள்களை   அட்டமே காத்து அருள் அருட்பெருஞ்ஜோதி


727


நிலம்பெறும் உயிர்வகை நீள்குழு அனைத்தும்   அலம்பெறக் காத்து அருள் அருட்பெருஞ்ஜோதி


729


வேர்வுற உதித்த மிகும் உயிர்த் திரள்களை   ஆர்வு உறக் காத்து அருள் அருட்பெருஞ்ஜோதி


731


உடல் உறு பிணியால் உயிர் உடல் கெடாவகை   அடல் உறக் காத்து அருள் அருட்பெருஞ்ஜோதி


733


சிசுமுதல் பருவச் செயல்களின் உயிர்களை   அசைவு அறக் காத்து அருள் அருட்பெருஞ்ஜோதி


735


உயிர் உறும் உடலையும் உடலு உறும் உயிரையும்   அயர்வு அறக் காத்து அருள் அருட்பெருஞ்ஜோதி


737


பாடு உறும் அவத்தைகள் பலவினும் உயிர்களை   ஆடு உறக் காத்து அருள் அருட்பெருஞ்ஜோதி


739


முச்சுடர் ஆதியால் எச்சக உயிரையும்   அச்சு அறக் காத்து அருள் அருட்பெருஞ்ஜோதி


741


வான்முகில் சத்தியால் மழை பொழிவித்து உயிர்   ஆன் அறக் காத்து அருள் அருட்பெருஞ்ஜோதி


743


இன்பு உறு சத்தியால் எழில்மழை பொழிவித்து   அன்பு உறக் காத்து அருள் அருட்பெருஞ்ஜோதி


745


எண் இயல் சத்தியால் எல்லா உலகினும்   அண் உயிர் காத்து அருள் அருட்பெருஞ்ஜோதி


747


அண்டப் புறப்புற அமுதம் பொழிந்து உயிர்   அண்டு உறக் காத்து அருள் அருட்பெருஞ்ஜோதி


749


தேவரை எல்லாம் திகழ் புற அமுது அளித்து   ஆ வகை காத்து அருள் அருட்பெருஞ்ஜோதி


751


அகப்புற அமுது அளித்து ஐவர் ஆதிகளை   அகப்படக் காத்து அருள் அருட்பெருஞ்ஜோதி


753


தரும் அக அமுதால் சத்தி சத்தர்களை   அருளினில் காக்கும் அருட்பெருஞ்ஜோதி


755


காலமும் நியதியும் காட்டி எவ் உயிரையும்   ஆலுறக் காத்து அருள் அருட்பெருஞ்ஜோதி


757


விச்சையை இச்சையை விளைவித்து உயிர்களை   அச்சு உறக் காத்து அருள் அருட்பெருஞ்ஜோதி


759


போகமும் களிப்பும் பொருந்துவித்து, உயிர்களை   ஆகம் உள் காக்கும் அருட்பெருஞ்ஜோதி


761


கலை அறிவு அளித்துக் களிப்பினில் உயிர் எலாம்   அலைவு அறக் காத்து அருள் அருட்பெருஞ்ஜோதி


763


விடய நிகழ்ச்சியால் மிகும் உயிர் அனைத்தையும்   அடைவு உறக் காத்து அருள் அருட்பெருஞ்ஜோதி


765


துன்பு அளித்து ஆங்கே சுகம் அளித்து உயிர்களை   அன்பு உறக் காத்து அருள் அருட்பெருஞ்ஜோதி


767


கரணேந் தியத்தால் களிப்பு உற உயிர்களை   அரண் நேர்ந்து அளித்து அருள் அருட்பெருஞ்ஜோதி


769


எத்தகை எவ்வுயிர் எண்ணின அவ்வுயிர்க்கு   அத்தகை அளித்து அருள் அருட்பெருஞ்ஜோதி


771


எப்படி எவ் உயிர் எண்ணின அவ் உயிர்க்கு   அப்படி அளித்து அருள் அருட்பெருஞ்ஜோதி


773


ஏங்காது உயிர்த்திரள் எங்கு எங்கு இருந்தன   ஆங்குஆங்கு அளித்து அருள் அருட்பெருஞ்ஜோதி


775


சொல் உறும் அசுத்தத் தொல் உயிர்க்கு அவ்வகை   அல்லலில் காத்து அருள் அருட்பெருஞ்ஜோதி


777


சுத்தமும் அசுத்தமும் தோய் உயிர்க்கு இருமையின்   அத்தகை காத்து அருள் அருட்பெருஞ்ஜோதி


779


வாய்ந்திடும் சுத்த வகை உயிர்க்கு ஒருமையின்   ஆய்ந்து உறக் காத்து அருள் அருட்பெருஞ்ஜோதி


781


எவை எலாம், எவை எலாம், ஈண்டின ஈண்டின,   அவை எலாம் காத்து அருள் அருட்பெருஞ்ஜோதி


783


அண்டத் துரிசையும், அகிலத் துரிசையும்,   அண்டுஅற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி


785


பிண்டத் துரிசையும், பேர் உயிர்த் துரிசையும்,   அண்டுஅற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி


787


உயிர் உறு மாயையின் உறுவிரி அனைத்தும்   அயிர் அற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி


789


உயிர் உறும் இருவினை உறுவிரிவு அனைத்தும்   அயர்வு அற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி


791


காமப் புடைப்பு உயிர்கண் தொடரா வகை   ஆம் அற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி


793


பொங்கு உறு வெகுளிப் புடைப்புகள் எல்லாம்   அங்கு அற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி


795


மதம்புரை மோகமும் மற்றவும் ஆங்காங்கு   அதம்பெற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி


797


வடு உறும் அசுத்த வாதனை அனைத்தையும்   அடர்பு அற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி


799


சுத்தமும் அசுத்தமும் தோய்ந்த வாதனைகளை   அத்தகை அடக்கும் அருட்பெருஞ்ஜோதி


801


நால்வயின் துரிசும் நண் உயிர் ஆதியில்   ஆல் அற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி


803


நால்வயின் படைப்பு நால்வயின் காப்பும்   ஆலற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி


805


மூவிடத்து இருமையின் முன்னிய தொழில்களில்   ஆவிடத்து அடக்கும் அருட்பெருஞ்ஜோதி


807


மூவிடம் மும்மையின் முன்னிய தொழில்களில்   ஆவிடம் அடக்கும் அருட்பெருஞ்ஜோதி


809


தத்துவச் சேட்டையும் தத்துவத் துரிசும்   அத்தகை அடக்கும் அருட்பெருஞ்ஜோதி


811


சுத்த மா நிலையில் சூழ் உறு விரிவை   அத்தகை அடக்கும் அருட்பெருஞ்ஜோதி


813


கரைவின் மா மாயைக் கரும் பெரும் திரையால்   அரைசு அது மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி


815


பேர் உறு நீலப் பெரும்திரை அதனால்   ஆர் உயிர் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி


817


பச்சைத் திரையால் பரவெளி அதனை   அச்சு உற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி


819


செம்மைத் திரையால் சித்து உறு வெளியை   அம்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி


821


பொன்மைத் திரையால் பொருள் உறு வெளியை   அன்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி


823


வெண்மைத் திரையால் மெய்ப்பதி வெளியை   அண்மையில் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி


825


கலப்புத் திரையால் கருது அனுபவங்களை   அலப்பு உற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி


827


விடய நிலைகளை வெவ் வேறு திரைகளால்   அடர்பு உற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி


829


தத்துவ நிலைகளைத் தனித் தனித் திரையால்   அத் திறம் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி


831


திரை மறைப்பு எல்லாம் தீர்த்து ஆங்கு ஆங்கே   அரசு உறக் காட்டும் அருட்பெருஞ்ஜோதி


833


தோற்ற மா மாயைத் தொடர்பு அறுத்து, அருளின்   ஆற்றலைக் காட்டும் அருட்பெருஞ்ஜோதி


835


சுத்த மா மாயைத் தொடர்பு அறுத்து அருளை   அத்தகை காட்டும் அருட்பெருஞ்ஜோதி


837


எனைத்து ஆணவம் முதல் எல்லாம் தவிர்த்தே   அனுக்கிரகம் புரி அருட்பெருஞ்ஜோதி


839


விடய மறைப்பு எலாம் விடுவித்து உயிர்களை   அடைவு உறத் தெருட்டும் அருட்பெருஞ்ஜோதி


841


சொருப மறைப்பு எலாம் தொலைப்பித்து உயிர்களை   அருளினில் தெருட்டும் அருட்பெருஞ்ஜோதி


843


மறைப்பின் மறந்தன வருவித்து ஆங்கே   அறத்தொடு தெருட்டும் அருட்பெருஞ்ஜோதி


845


எவ்வகை உயிர்களும் இன்பு உற ஆங்கே   அவ்வகை தெருட்டும் அருட்பெருஞ்ஜோதி


847


கடவுளர் மறைப்பைக் கடிந்து அவர்க்கு இன்பம்   அடை உறத் தெருட்டும் அருட்பெருஞ்ஜோதி


849


சத்திகள் மறைப்பைத் தவிர்த்து அவர்க்கு இன்பம்   அத்துறத் தெருட்டும் அருட்பெருஞ்ஜோதி


851


சத்தர்கள் மறைப்பைத் தவிர்த்து அவர்க்கு இன்பம்   அத்தகை தெருட்டும் அருட்பெருஞ்ஜோதி


853


படைக்கும் தலைவர்கள் பற்பல கோடியை   அடைப்பு உறப் படைக்கும் அருட்பெருஞ்ஜோதி


855


காக்கும் தலைவர்கள் கணக்குஇல் பல் கோடியை   ஆக்குறக் காக்கும் அருட்பெருஞ்ஜோதி


857


அடக்கும் தலைவர்கள் அளவுஇலர் தம்மையும்   அடர்ப்பு அற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி


859


மறைக்கும் தலைவர்கள் வகை பல கோடியை   அறத்தொடு மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி


861


தெருட்டும் தலைவர்கள் சேர் பல கோடியை   அருள்திறம் தெருட்டும் அருட்பெருஞ்ஜோதி


863


ஐந்தொழில் ஆதிசெய் ஐவர் ஆதிகளை   ஐந்தொழில் ஆதிசெய் அருட்பெருஞ்ஜோதி


865


இறந்தவர் எல்லாம் எழுந்திட உலகில்   அறம் தலை அளித்த அருட்பெருஞ்ஜோதி


867


செத்தவர் எல்லாம் சிரித்தாங்கு எழுதிறல்   அத்தகை காட்டிய அருட்பெருஞ்ஜோதி


869


இறந்தவர் எழுக என்று எண்ணியாங்கு எழுப்பிட   அறம் துணை எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி


871


செத்தவர் எழுகு எனச் செப்பியாங் எழுப்பிட   அத்திறல் எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி


873


சித்து எலாம் வல்ல திறல் அளித்து எனக்கே   அத்தன் என்று ஓங்கும் அருட்பெருஞ்ஜோதி


875


ஒன்று அது, இரண்ட அது, ஒன்றின் இரண்டு அது,   ஒன்றினுள் ஒன்ற அது, ஒன்று எனும் ஒன்றே


877


ஒன்று அல, இரண்ட அல, ஒன்றின் இரண்டு அல,   ஒன்றினுள் ஒன்ற அல, ஒன்று எனும் ஒன்றே


879


ஒன்றினுள் ஒன்று உள, ஒன்றினுள் ஒன்று இல,   ஒன்று அற ஒன்றிய, ஒன்று எனும் ஒன்றே


881


களங்கம் நீத்து உலகம் களிப்பு உற, மெய்ந்நெறி   விளங்க, என் உள்ளே விளங்கு மெய்ப் பொருளே


883


மூஇரு நிலையின் முடி நடு, முடி மேல்   ஓஅற விளங்கும் ஒருமை மெய்ப் பொருளே


885


எழு நிலை மிசையே இன்பு உருவாகி   வழு நிலை நீக்கி வயங்கும் மெய்ப் பொருளே


887


நவ நிலை மிசையே நடு உறு நடுவே   சிவமயம் ஆகித் திகழ்ந்த மெய்ப் பொருளே


889


ஏகாதச நிலை யாது அதின் நடுவே   ஏகஆதன மிசை இருந்த மெய்ப் பொருளே


891


திரையோதச நிலை சிவவெளி நடுவே   வரை ஓதஅரு சுக வாழ்க்கை மெய்ப் பொருளே


893


ஈர் எண் நிலைஎன இயம்பும் மேல்நிலையில்   பூரண சுகமாய்ப் பொருந்தும் மெய்ப் பொருளே


895


எல்லா நிலைகளும் இசைந்து ஆங்குகாங்கே   எல்லாம் ஆகி இலங்கும் மெய்ப் பொருளே


897


மன(ம்) ஆதிகள் பொருந்தா வான் நடு வான்ஆய்   அனாதி உண்மை அதாய் அமர்ந்த மெய்ப் பொருளே


899


தான் ஒரு தான் ஆய்த் தானே தான் ஆய்   ஊன் உயிர் விளக்கும் ஒரு தனிப் பொருளே


901


அதுவின் உள் அதுஆய் அதுவே அதுஆய்   பொதுவின் உள் நடிக்கும் பூரணப் பொருளே


903


இயல்பின் உள் இயல்புஆய் இயல்பே இயல்புஆய்   உயல் உற விளங்கும் ஒருதனிப் பொருளே


905


அருவின் உள் அருஆய் அருஅரு அருஆய்   உருவின் உள் விளங்கும் ஒருபரம் பொருளே


907


அலகு இலாச் சித்து ஆய், அது நிலை அது ஆய்,   உலகு எலாம் விளங்கும் ஒரு தனிப் பொருளே


909


பொருளின் உள் பொருள் ஆய், பொருள் அது பொருள் ஆய்,   ஒருமையின் விளங்கும் ஒருதனிப் பொருளே


911


ஆடு உறு சித்திகள் அறுபத்து நான்கு எழு   கோடியும் விளங்கக் குலவும் மெய்ப் பொருளே


913


கூட்டு உறு சித்திகள் கோடி பல் கோடியும்   ஆட்டு உற விளங்கும் அரும் பெரும் பொருளே


915


அறிவு உறு சித்திகள் அனந்த(ம்) கோடிகளும்   பிறிவு அற விளக்கும் பெரும்தனிப்பொருளே


917


வீடுகள் எல்லாம் விதிநெறி விளங்க   ஆடல் செய்து அருளும் அரும் பெரும் பொருளே


919


பற்றுகள் எல்லாம் பதிநெறி விளங்க   உற்று அருள் ஆடல் செய் ஒரு தனிப் பொருளே


921


பரத்தினில் பரமே, பரத்தின் மேல் பரமே,   பரத்தின் உள் பரமே, பரம் பரம் பரமே


923


பரம் பெறும் பரமே, பரம் தரும் பரமே,   பரம் பதம் பரமே, பரம் சிதம்பரமே


925


பரம் புகழ் பரமே, பரம் பகர் பரமே,   பரம் சுக பரமே, பரம் சிவ பரமே


927


பரம் கொள் சிற்பரமே, பரம் செய் தற்பரமே,   தரம் கொள் பொற்பரமே, தனிப் பெரும் பரமே


929


வரம் பராபரமே, வணம் பராபரமே,   பரம் பராபரமே பதம் பராபரமே


931


சத்திய பதமே, சத்துவ பதமே   நித்திய பதமே, நிற்குண பதமே


933


தத்துவ பதமே, தற் பத பதமே   சித் உறு பதமே, சிற் சுக பதமே


935


தம் பரம் பதமே, தனிச் சுகம் பதமே   அம் பரம் பதமே, அருட் பரம் பதமே


937


தந்திர பதமே, சந்திர பதமே,   மந்திர பதமே, மந்தண பதமே


939


நவம் தரு பதமே, நடம் தரு பதமே,   சிவம் தரு பதமே, சிவசிவ பதமே


941


பிரம மெய்க் கதியே, பிரம மெய்ப் பதியே,   பிரம நிற் குணமே, பிரம சித் குணமே


943


பிரமமே, பிரமப் பெருநிலை மிசை உறும்   பரமமே, பரம பதம் தரும் சிவமே


945


அவனோடு அவளாய், அதுஆய், அலஆய்,   நவம் ஆம் நிலை மிசை நண்ணிய சிவமே


947


எம் பொருள் ஆகி, எமக்கு அருள் புரியும்,   செம் பொருள் ஆகிய சிவமே சிவமே


949


ஒருநிலை இதுவே உயர் நிலை எனும் ஒரு   திருநிலை மேவிய சிவமே சிவமே


951


மெய் வைத்து அழியா வெறு வெளி நடு உறு   தெய்வப் பதி ஆம் சிவமே சிவமே


953


புரை தவிர்த்து எனக்கே பொன்முடி சூட்டிச்   சிரம் உற நாட்டிய சிவமே சிவமே


955


கல்வியும், சாகாக் கல்வியும், அழியாச்   செல்வமும், அளித்த சிவமே சிவமே


957


அருள் அமுது எனக்கே அளித்து அருள் நெறி வாய்த்   தெருள் உற வளர்க்கும் சிவமே சிவமே


959


சத்து எலா ஆகியும் தான் ஒரு தானாம்   சித்து எலாம் வல்லது ஓர் திருவருள் சிவமே


961


எங்கே கருணை இயற்கையின் உள்ளன   அங்கே விளங்கிய அருட்பெருஞ்சிவமே


963


யாரே என்னினும் இரங்குகின் றார்க்குச்   சீரே அளிக்கும் சிதம்பர சிவமே


965


பொய்ந்நெறி அனைத்தினும் புகுத்தாது, எனை அருள்   செந்நெறி செலுத்திய சிற்சபைச் சிவமே


967


கொல்லா நெறியே குருஅருள் நெறி எனப்   பல்கால் எனக்குப் பகர்ந்த மெய்ச்சிவமே


969


உயிர் எலாம் பொதுவின் உளம்பட நோக்குக,   செயிர் எலாம் விடுக, எனச் செப்பிய சிவமே


971


பயிர்ப்பு உறு கரணப் பரிசுகள் பற்பல,   உயிர்த்திரள் ஒன்று, என உரைத்த மெய்ச்சிவமே


973


உயிருள் யாம், எம்முள் உயிர், இவை உணர்ந்தே   உயிர்நலம் பரவுக, என்று உரைத்த மெய்ச்சிவமே


975


இயல் அருள் ஒளி ஓர் ஏகதேசத்தின்ஆம்   உயிர் ஒளி காண்க என்று உரைத்த மெய்ச்சிவமே


977


அருள் அலாது அணுவும் அசைந்திடாது அதனால்   அருள் நலம் பரவுகு என்று அறைந்த மெய்ச்சிவமே


979


அருள் உறின் எல்லாம் ஆகும், ஈது உண்மை,   அருள் உற முயல்க, என்று அருளிய சிவமே


981


அருள் நெறி ஒன்றே தெருள் நெறி, மற்று எலாம்   இருள் நெறி, என எனக்கு இயம்பிய சிவமே


983


அருள்பெறின் துரும்பும் ஓர் ஐந்தொழில் புரியும்   தெருள் இது எனவே செப்பிய சிவமே


985


அருள் அறிவு ஒன்றே அறிவு, மற்று எல்லாம்   இருள் அறிவு என்றே வகுத்த மெய்ச்சிவமே


987


அருட்சுகம் ஒன்றே அரும்பெறல் பெரும்சுகம்,   மருட்சுகம் பிற, என வகுத்த மெய்ச்சிவமே


989


அருட்பேறு அதுவே அரும்பெறல் பெரும் பேறு   இருட்பேறு அறுக்கும் என்று இயம்பிய சிவமே


991


அருள்தனி வல்லபம் அதுவே எலாம் செய்   பொருள் தனிச்சித்து எனப் புகன்ற மெய்ச்சிவமே


993


அருள் அறியார் தமை அறியார், எம்மையும்   பொருள் அறியார், எனப் புகன்ற மெய்ச்சிவமே


995


அருள்நிலை ஒன்றே அனைத்தும் பெறும் நிலை   பொருள்நிலை காண்க எனப் புகன்ற மெய்ச்சிவமே


997


அருள்வடிவு அதுவே அழியாத் தனிவடிவு,   அருள்பெற முயலுக, என்று அருளிய சிவமே


999


அருளே நம் இயல், அருளே நம் உரு,   அருளே நம் வடிவு ஆம், என்ற சிவமே


1001


அருளே நம் அடி, அருளே நம் முடி,   அருளே நம் நடு ஆம், என்ற சிவமே


1003


அருளே நம் அறிவு, அருளே நம் மனம்,   அருளே நம் குணம் ஆம், என்ற சிவமே


1005


அருளே நம் பதி, அருளே நம் பதம்,   அருளே நம் இடம் ஆம், என்ற சிவமே


1007


அருளே நம் துணை, அருளே நம் தொழில்,   அருளே நம் விருப்பு ஆம், என்ற சிவமே


1009


அருளே நம் பொருள், அருளே நம் ஒளி,   அருளே நாம், அறிவாய் என்ற சிவமே


1011


அருளே நம் குலம், அருளே நம் இனம்,   அருளே நாம், அறிவாய் என்ற சிவமே


1013


அருளே நம் சுகம், அருளே நம் பெயர்,   அருளே நாம், அறிவாய் என்ற சிவமே


1015


அருள் ஒளி அடைந்தனை, அருள் அமுது உண்டனை   அருள் மதி வாழ்க! என்று அருளிய சிவமே


1017


அருள் நிலை பெற்றனை, அருள்வடிவு உற்றனை,   அருள் அரசு இயற்றுக! என்று அருளிய சிவமே


1019


உள் அகத்து அமர்ந்து, எனது உயிரில் கலந்து, அருள்   வள்ளல் சிற்றம்பலம் வளர்சிவ பதியே


1021


நிகர் இலா இன்ப நிலை நடு வைத்து, எனைத்   தகவொடு காக்கும் தனிச் சிவபதியே


1023


சுத்த சன்மார்க்க சுகநிலை தனில், எனைச்   சத்தியன் ஆக்கிய தனிச்சிவ பதியே


1025


ஐவரும் காண்டற்கு அரும் பெரும் பொருள், என்   கைவரப் புரிந்த, கதி சிவ பதியே


1027


துன்பம் தொலைத்து, அருட்ஜோதியால் நிறைந்த   இன்பம் எனக்கு அருள் எழில் சிவ பதியே


1029


சித்தமும் வாக்கும் செல்லாப் பெருநிலை   ஒத்து உற ஏற்றிய ஒரு சிவ பதியே


1031


கையறவு அனைத்தும் கடிந்து, எனைத் தேற்றி,   வையம் மேல் வைத்த, மாசிவபதியே


1033


இன்பு உறச் சிறியேன் எண்ணுதோறு(ம்) எண்ணுதோறு(ம்)   அன்பொடு என் கண் உறும் அருட்சிவ பதியே


1035


பிழை எலாம் பொறுத்து, எனுள் பிறங்கிய, கருணை   மழை எலாம் பொழிந்து, வளர்சிவ பதியே


1037


உளத்தினும் கண்ணினும் உயிரினும் எனது   குளத்தினும் நிரம்பிய குருசிவ பதியே


1039


பரம் உடன் அபரம் பகர்நிலை இவை எனத்   திரம் உற அருளிய திரு அருட் குருவே


1041


மதிநிலை, இரவியின் வளர்நிலை, அனலின்   திதிநிலை, அனைத்தும் தெரித்த சற்குருவே


1043


கணநிலை, அவற்றின் கருநிலை, அனைத்தும்   குணம் உறத் தெரித்து உட்குலவு சற்குருவே


1045


பதி நிலை, பசு நிலை, பாச நிலை எலாம்   மதியுறத் தெரித்து, உள் வயங்கும் சற்குருவே


1047


பிரம ரகசியம் பேசி, என் உளத்தே   தரம் உற விளங்கும், சாந்த சற்குருவே


1049


பரம ரகசியம் பகர்ந்து, எனது உளத்தே   வரம் உற வளர்த்து வயங்கும் சற்குருவே


1051


சிவ ரகசியம் எலாம் தெரிவித்து, எனக்கே   நவநிலை காட்டிய, ஞான சற்குருவே


1053


சத்தியல் அனைத்தும் சித்தியல் முழுதும்   அத்தகை தெரித்த அருட்சிவ குருவே


1055


அறிபவை எல்லாம் அறிவித்து, என் உள்ளே   பிறிவற விளங்கும் பெரிய சற்குருவே


1057


கேட்பவை எல்லாம் கேட்பித்து, என் உள்ளே   வேட்கையின் விளங்கும் விமல சற்குருவே


1059


காண்பவை எல்லாம் காட்டுவித்து, எனக்கே   மாண் பதம் அளித்து வயங்கு சற்குருவே


1061


செய்பவை எல்லாம் செய்வித்து, எனக்கே   உய்பவை அளித்து, எனுள் ஓங்கு சற்குருவே


1063


உண்பவை எல்லாம் உண்ணுவித்து, என் உள்   பண்பினில் விளங்கும் பரம சற்குருவே


1065


சாகாக் கல்வியின் தரம் எலாம் கற்பித்து,   ஏகாக்கரப் பொருள் ஈந்த, சற்குருவே


1067


சத்தியம் ஆம் சிவசித்திகள் அனைத்தையும்   மெய்த்தகை அளித்து எனுள் விளங்கு சற்குருவே


1069


எல்லா நிலைகளும் ஏற்றிச் சித்து எலாம்   வல்லான் என எனை வைத்த சற்குருவே


1071


சீர் உற, அருள் ஆம் தேசு உற, அழியாப்   பேர் உற, என்னைப் பெற்ற நல்தாயே


1073


பொருந்திய அருட்பெரும் போகமே உறுக எனப்   பெரும் தயவால் எனைப் பெற்ற நல்தாயே


1075


ஆன்ற சன்மார்க்கம் அணி பெற எனைத்தான்   ஈன்று அமுதளித்த இனிய நல்தாயே


1077


பசித்திடு தோறும், என்பால் அணைந்து, அருளால்   வசித்து, அமுது அருள்புரி வாய்மை நல்தாயே


1079


தளர்ந்ததோறு(ம்) அடியேன் சார்பு அணைந்து, என்னை   உளம் தெளிவித்த ஒருமை நல்தாயே


1081


அருளமுதே முதல் ஐவகை அமுதமும்   தெருள் உற எனக்கு அருள் செல்வ நல்தாயே


1083


இயல் அமுதே முதல் எழுவகை அமுதமும்   உயல் உற எனக்கு அருள் உரிய நல்தாயே


1085


நண்புஅறும் எண்வகை நவவகை அமுதமும்   பண்பு உற எனக்கு அருள் பண்புடைத் தாயே


1087


மற்று உள அமுத வகை எலாம் எனக்கே   உற்று உண அளித்தருள் ஓங்கு நல்தாயே


1089


கலக்கமும் அச்சமும் கடிந்து, எனது உளத்தே   அலக்கணும் தவிர்த்து, அருள் அன்புடைத் தாயே


1091


துய்ப்பினில் அனைத்தும் சுகம்பெற அளித்து, எனக்கு   எய்ப்பு எலாம் தவிர்த்த, இன்புடைத் தாயே


1093


சித்திகள் எல்லாம் தெளிந்திட, எனக்கே   சத்தியை அளித்த, தயவுடைத் தாயே


1095


சத்தி நிபாதம் தனை அளித்து, எனைமேல்   வைத்து, அமுது அளித்த, மரபுடைத் தாயே


1097


சத்தி சத்தர்கள் எலாம், சார்ந்து, எனது ஏவல்செய்   சித்தியை அளித்த, தெய்வ நல்தாயே


1099


தன்நிகர் இல்லாத் தலைவனைக் காட்டியே,   என்னை மேல் ஏற்றிய, இனிய நல்தாயே


1101


வெளிப்பட விரும்பிய விளைவு எலாம் எனக்கே   அளித்து அளித்து இன்புசெய் அன்புடைத் தாயே


1103


எண் அகத்தொடு புறத்து என்னை எஞ்ஞான்றும்   கண் எனக் காக்கும் கருணை நல்தாயே


1105


இன் அருள் அமுத அளித்து, இறவாத் திறல் புரிந்து,   என்னை வளர்த்திடும், இன்புடைத் தாயே


1107


என் உடல், என் உயிர், என் அறிவு, எல்லாம்   தன்ன என்று ஆக்கிய தயவுடைத் தாயே


1109


தெரியா வகையால் சிறியேன் தளர்ந்திடத்   தரியாது அணைத்த தயவுடைத் தாயே


1111


சினம் முதல அனைத்தையும் தீர்த்து, எனை நனவினும்   கனவினும் பிரியாக், கருணை நல்தாயே


1113


தூக்கமும்சோம்பும், என்துன்பமும்அச்சமும்,   ஏக்கமும் நீக்கிய என் தனித் தாயே


1115


துன்பு எலாம் தவிர்த்து, உளே அன்பு எலாம் நிரம்ப,   இன்பு எலாம் அளித்த, என் தனித் தந்தையே


1117


எல்லா நன்மையும் என்தனக்கு அளித்த   எல்லாம் வல்லசித்து என்றனித் தந்தையே


1119


நாயின் கடையேன் நலம்பெறக் காட்டிய   தாயின் பெரிதும் தயவுடைத் தந்தையே


1121


அறிவு இலாப் பருவத்து அறிவு எனக்கு அளித்தே   பிறிவு இலாது அமர்ந்த பேரருள் தந்தையே


1123


புல் நிகர் இல்லேன் பொருட்டு, இவண் அடைந்த   தன் நிகர் இல்லாத் தனிப்பெரும் தந்தையே


1125


அகத்தினும் புறத்தினும் அமர்ந்து அருட்ஜோதி   சகத்தினில் எனக்கே தந்த மெய்த் தந்தையே


1127


இணைஇலாக் களிப்புற்று இருந்திட எனக்கே   துணைஅடி சென்னியில் சூட்டிய தந்தையே


1129


ஆதி ஈறு அறியா அருள் அரசாட்சியில்   ஜோதி மா மகுடம் சூட்டிய தந்தையே


1131


எட்டு இரண்டு அறிவித்து, எனைத் தனி ஏற்றி,   பட்டி மண்டபத்தில் பதித்த மெய்த்தந்தையே


1133


தம்கோல் அளவு அது தந்து அருட்ஜோதிச்   செங்கோல் செலுத்து எனச் செப்பிய தந்தையே


1135


தன் பொருள் அனைத்தையும் தன் அரசாட்சியில்   என் பொருள் ஆக்கிய என் தனித் தந்தையே


1137


தன் வடிவு அனைத்தையும் தன் அரசாட்சியில்   என் வடிவு ஆக்கிய என் தனித் தந்தையே


1139


தன் சித்து அனைத்தையும் தன் சமுகத்தினில்   என் சித்து ஆக்கிய என் தனித் தந்தையே


1141


தன் வசமாகிய தத்துவம் அனைத்தையும்   என் வசம் ஆக்கிய என் உயிர்த் தந்தையே


1143


தன் கையில் பிடித்த தனி அருட்ஜோதியை   என் கையில் கொடுத்த என் தனித் தந்தையே


1145


தன்னையும் தன் அருட் சத்தியின் வடிவையும்   என்னையும் ஒன்று என இயற்றிய தந்தையே


1147


தன் இயல் என் இயல், தன் செயல் என் செயல்   என்ன இயற்றிய என் தனித் தந்தையே


1149


தன் உரு என் உரு, தன் உரை என் உரை   என்ன இயற்றிய என் தனித் தந்தையே


1151


சதுரப் பேரருள் தனிப் பெரும் தலைவன் என்று   எதிரற்று ஓங்கிய என்னுடைத் தந்தையே


1153


மனம் வாக்கு அறியா வரைப்பினில் எனக்கே   இன வாக்கு அருளிய என் உயிர்த் தந்தையே


1155


உணர்ந்து உணர்ந்து உணரினும் உணராப் பெருநிலை   அணைந்திட எனக்கே அருளிய தந்தையே


1157


துரிய வாழ்வுடனே சுக பூரணம் எனும்   பெரிய வாழ்வு அளித்த பெரும் தனித் தந்தையே


1159


ஈறு இலாப் பதங்கள் யாவையும் கடந்த   பேறு அளித்து ஆண்ட பெருந்தகைத் தந்தையே


1161


எவ்வகைத் திறத்தினும் எய்துதற்கு அரிதாம்   அவ்வகை நிலை எனக்கு அளித்த நல் தந்தையே


1163


இனிப் பிறவா நெறி எனக்கு அளித்து அருளிய   தனிப்பெரும் தலைமைத் தந்தையே தந்தையே


1165


பற்று அயர்ந்து அஞ்சிய பரிவுகண்டு அணைந்து எனைச்   சற்றும் அஞ்சேல் எனத் தாங்கிய துணையே


1167


தளர்ந்த அத்தருணம் என் தளர்வு எலாம் தவிர்த்து உள்   கிளர்ந்திட எனக்குக் கிடைத்த மெய்த்துணையே


1169


துறை இது, வழி இது, துணிவு இது நீசெயும்   முறை இது எனவே மொழிந்த மெய்த்துணையே


1171


எங்கு உறு தீமையும் எனைத் தொடரா வகை   கங்குலும் பகலும் மெய்க் காவல்செய் துணையே


1173


வேண்டிய வேண்டிய விருப்பு எலாம் எனக்கே   ஈண்டு இருந் அருள்புரி என் உயிர்த்துணையே


1175


இகத்தினும் பரத்தினும் எனக்கு இடர் சாராது   அகத்தினும் புறத்தினும் அமர்ந்த மெய்த்துணையே


1177


அயர்வு அற எனக்கே அருள் துணையாகி என்   உயிரினும் சிறந்த ஒருமை என் நட்பே


1179


அன்பினில் கலந்து எனது அறிவினில் பயின்றே   இன்பினில் அளைந்த என் இன் உயிர் நட்பே


1181


நான் புரிவன எலாம் தான் புரிந்து எனக்கே   வான் பதம் அளிக்க வாய்த்த நல் நட்பே


1183


உள்ளமும் உணர்ச்சியும் உயிரும் கலந்துகொண்டு   எள் உறு நெய்யில் என் உள் உறு நட்பே


1185


செற்றமும் தீமையும் தீர்த்து நான் செய்த   குற்றமும் குணமாக் கொண்ட என் நட்பே


1187


குணம் குறி முதலிய குறித்திடாது எனையே   அணங்கு அறக் கலந்த அன்புடை நட்பே


1189


பிணக்கும் பேதமும் பேய் உலகோர் புகல்   கணக்கும் தீர்த்து எனைக் கலந்த நல் நட்பே


1191


சவலை நெஞ்சகத்தின் தளர்ச்சியும் அச்சமும்   கவலையும் தவிர்த்து எனைக் கலந்த நல் நட்பே


1193


களைப்பு அறிந்து எடுத்துக் கலக்கம் தவிர்த்து எனக்கு   இளைப்பு அறிந்து உதவிய என் உயிர் உறவே


1195


தன்னைத் தழுவுறு தரம் சிறிது அறியா   என்னைத் தழுவிய என் உயிர் உறவே


1197


மனக்குறை நீக்கி நல்வாழ்வு அளித்து என்றும்   எனக்கு உறவாகிய என் உயிர் உறவே


1199


துன்னும் அனாதியே சூழ்ந்து எனைப் பிரியாது   என் உறவு ஆகிய என் உயிர் உறவே


1201


என்றும் ஓர் நிலையாய் என்றும் ஓர் இயலாய்   என்றும் உள்ளதுவாம் என் தனிச் சத்தே


1203


அனைத்து உலக வைகளும் ஆங்காங்கு உணரினும்   இனைத்து என அறியா என் தனிச் சத்தே


1205


பொது மறை முடிகளும் புகல் அவை முடிகளும்   இது எனற்கு அரிதாம் என் தனிச் சத்தே


1207


ஆகம முடிகளும் அவை புகல் முடிகளும்   ஏகுதற்கு அரிதாம் என் தனிச் சத்தே


1209


சத்தியம் சத்தியம் சத்தியம் எனவே   இத்தகை வழுத்தும் என் தனிச் சத்தே


1211


துரியமும் கடந்தது ஓர் பெரிய வான் பொருள் என   உரைசெய் வேதங்கள் உன்னும் மெய்ச் சத்தே


1213


அன்று, அதன் அப்பால், அதன் பரத்ததுதான்   என்றிட நிறைந்த என் தனிச் சத்தே


1215


என்றும் உள்ளதுவாய் எங்கும் ஓர் நிறைவாய்   என்றும் விளங்கிடும் என் தனிச் சித்தே


1217


சத்திகள் பலவாய்ச் சத்தர்கள் பலவாய்   இத்தகை விளங்கும் என் தனிச் சித்தே


1219


தத்துவம் பலவாய்த் தத்துவி பலவாய்   இத்தகை விளங்கும் என் தனிச் சித்தே


1221


படிநிலை பலவாய்ப் பதநிலை பலவாய்   இடிவு அற விளங்கிடும் என் தனிச் சித்தே


1223


மூர்த்தர்கள் பலவாய் மூர்த்திகள் பலவாய்   ஏற்பட விளக்கிடும் என் தனிச் சித்தே


1225


உயிர்வகை பலவாய் உடல்வகை பலவாய்   இயல் உற விளக்கிடும் என் தனிச் சித்தே


1227


அறிவு அவை பலவாய் அறிவன பலவாய்   எறிவு அற விளக்கிடும் என் தனிச் சித்தே


1229


நினைவு அவை பலவாய் நினைவன பலவாய்   இனைவு அற விளக்கிடும் என் தனிச் சித்தே


1231


காட்சிகள் பலவாய் காண்பன பலவாய்   ஏட்சியின் விளக்கிடும் என் தனிச் சித்தே


1233


செய்வினை பலவாய்ச் செய்வன பலவாய்   எய்வு அற விளக்கிடும் என் தனிச் சித்தே


1235


அண்ட சராசரம் அனைத்தையும் பிறவையும்   எண்தர விளக்கும் என் தனிச் சித்தே


1237


எல்லாம் வல்ல சித்து என மறை புகன்றிட   எல்லாம் விளக்கிடும் என் தனிச் சித்தே


1239


ஒன்று அதில் ஒன்று என்று உரைக்கவும் படாதாய்   என்றும் ஓர் படித்தாம் என் தனி இன்பே


1241


இதுஅது என்னா இயல் உடை அதுவாய்   எதிர் அற நிறைந்த என் தனி இன்பே


1243


ஆக்கு உறும் அவத்தைகள் அனைத்தையும் கடந்து, மேல்   ஏக்கு அற நிறைந்த, என் தனி இன்பே


1245


அறிவுக்கு அறிவினில் அதுஅது அதுவாய்   எறிவு அற்று ஓங்கிய என் தனி இன்பே


1247


விடயம் எவற்றிலும் மேன்மேல் விளைந்து அவை   இடைஇடை ஓங்கிய என் தனி இன்பே


1249


இம்மையும் மறுமையும் இயம்பிடும் ஒருமையும்   எம்மையும் நிரம்பிடும் என் தனி இன்பே


1251


முத்தர்கள் சித்தர்கள் சத்திகள் சத்தர்கள்   எத் திறத்தவர்க்கும் ஆம் என் தனி இன்பே


1253


எல்லா நிலைகளின் எல்லா உயிர் உறும்   எல்லா இன்பும் ஆம் என் தனி இன்பே


1255


கரும்ப உறு சாறும், கனிந்த முக்கனியின்   விரும்புறும் இரதமும், மிக்க தீம் பாலும்,


1257


குணங்கொள் கோல்தேனும், கூட்டி ஒன்றாக்கி,   மணங்கொளப் பதம்செய் வகைஉற இயற்றிய


1259


உணவு எனப் பல்கால் உரைக்கினும் நிகரா   வணம் உறும் இன்ப மயமே அதுவாய்க்


1261


கலந்து, அறிவு உருவாய்க், கருதுதற்கு அரிதாய்,   நலம்தரும் விளக்கமும், நவில் அரும் தண்மையும்,


1263


உள்ளதாய், என்றும் உள்ளதாய், என் உள்   உள்ளதாய், என்றன் உயிர் உளம் உடம்புடன்


1265


எல்லாம் இனிப்ப, இயல் உறுசுவை அளித்து,   எல்லாம் வல்ல சித்து இயற்கையது ஆகிச்,


1267


சாகா வரமும், தனித்த பேர் அறிவும்,   மா காதலின் சிவ வல்லப சத்தியும்


1269


செயற்கு அரும் அனந்த சித்தியும், இன்பமும்,   மயக்கு அறத் தரும் திறல் வண்மையது ஆகித்


1271


பூரண வடிவாய்ப் பொங்கி மேல் ததும்பி   ஆரண முடியுடன், ஆகம முடியும்,


1273


கடந்து, எனது அறிவாம் கன(ல்) மேல் சபைநடு   நடம் திகழ்கின்ற மெய்ஞ்ஞான ஆரமுதே


1275


சத்திய அமுதே தனித் திரு அமுதே   நித்திய அமுதே நிறை சிவ அமுதே


1277


சச்சிதானந்தத் தனிமுதல் அமுதே   மெய்ச் சிதாகாச விளைவு அருள் அமுதே


1279


ஆனந்த அமுதே அருள் ஒளி அமுதே   தான் அந்தம் இல்லாத் தத்துவ அமுதே


1281


நவநிலை தரும் ஓர் நல்ல தெள் அமுதே   சிவநிலை தனிலே திரண்ட உள் அமுதே


1283


பொய்படாக் கருணைப் புண்ணிய அமுதே   கைபடாப் பெருஞ்சீர்க் கடவுள் வான் அமுதே


1285


அகம் புறம் அகப்புறம் ஆகிய புறப்புறம்   உகந்த நான்கு இடத்தும் ஓங்கிய அமுதே


1287


பனிமுதல் நீக்கிய பரம்பர அமுதே   தனிமுதல் ஆய சிதம்பர அமுதே


1289


உலகு எலாம் கொள்ளினும் உலப்பிலா அமுதே   அலகு இலாப் பெருந்திறல் அற்புத அமுதே


1291


அண்டமும், அதன் மேல் அண்டமும், அவற்று உள   பண்டமும் காட்டிய பரம்பர மணியே


1293


பிண்டமும், அதில் உறு பிண்டமும், அவற்று உள   பண்டமும் காட்டிய பராபர மணியே


1295


நினைத்தவை நினைத்தவை நினைத்தாங்கு எய்துற   அனைத்தையும் தரும் ஓர் அரும்பெறல் மணியே


1297


விண்பதம் அனைத்தும் மேல்பதம் முழுவதும்   கண்பெற நடத்தும் ககன மா மணியே


1299


பார்பதம் அனைத்தும் பகர் அடி முழுவதும்   சார்பு உற நடத்தும் சரஒளி மணியே


1301


அண்ட கோடிகள் எலாம் அரைக்கணத்து ஏகிக்   கண்டுகொண்டிட ஒளிர் கலைநிறை மணியே


1303


சர அசர உயிர்தொறும் சாற்றிய பொருள்தொறும்   விராவி உள் விளங்கும் வித்தக மணியே


1305


மூவரும் முனிவரும் முத்தரும் சித்தரும்   தேவரும் மதிக்கும் சித்தி செய் மணியே


1307


தாழ்வு எலாம் தவிர்த்து சகம் மிசை அழியா   வாழ்வு எனக்கு அளித்த வளர் ஒளி மணியே


1309


நவமணி முதலிய நலம் எலாம் தரும் ஒரு   சிவமணி எனும் அருட் செல்வ மா மணியே


1311


வான் பெறற்கு அரிய வகை எலாம் விரைந்து   நான் பெற அளித்த நாத மந்திரமே


1313


கற்பம் பலபல கழியினும் அழியாப்   பொற்பு உற அளித்த புனித மந்திரமே


1315


கரமும் கரமும் அழியாச் சிகரமும்   கரமும் ஆகிய வாய்மை மந்திரமே


1317


ஐந்து என, எட்டு என, ஆறு என, நான்கு என   முந்து உறு மறை முறை மொழியும் மந்திரமே


1319


வேதமும் ஆகம விரிவுகள் அனைத்தும்   ஓத நின்று உலவாது ஓங்கு மந்திரமே


1321


உடற்பிணி அனைத்தையும் உயிர்ப்பிணி அனைத்தையும்   அடர்ப்பு அறத் தவிர்த்த அருட்சிவ மருந்தே


1323


சித்திக்கு மூலம் ஆம் சிவமருந்து என உளம்   தித்திக்கும் ஞானத் திரு அருள் மருந்தே


1325


இறந்தவர் எல்லாம் எழுந்திடப் புரியும்   சிறந்த வல்லபம் உறு திரு அருள் மருந்தே


1327


மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு   கரணப் பெரும்திறல் காட்டிய மருந்தே


1329


நரை திரை மூப்பு அவை நண்ணா வகை தரும்   உரை தரு பெரும் சீர் உடைய நல் மருந்தே


1331


என்றே என்னினும் இளமையோடு இருக்க   நன்றே தரும் ஒரு ஞான மா மருந்தே


1333


மலப்பிணி தவிர்த்து, அருள்வலம் தருகின்றது ஓர்   நலத்தகை அது என நாட்டிய மருந்தே


1335


சிற்சபை நடுவே திருநடம் புரியும்   அற்புத மருந்து எனும் ஆனந்த மருந்தே


1337


இடை உறப் படாத இயற்கை விளக்கமாய்த்   தடை ஒன்றும் இல்லாத் தகவு உடை அதுவாய்


1339


மாற்று இவை என்ன மதித்து அளப்ப அரிதாய்   ஊற்றமும் வண்ணமும் ஒருங்கு உடை அதுவாய்க்


1341


காட்சிக்கு இனிய நற்கலைஉடை அதுவாய்   ஆட்சிக்கு உரிய பன்மாட்சியும் உடைத்தாய்


1343


கைதவர் கனவினும் காண்டற்கு அரிதாய்ச்   செய்தவப் பயன் ஆம் திருவருள் வலத்தால்


1345


உளம் பெறும் இடம் எலாம் உதவுக எனவே   வளம் பட வாய்த்து மன்னிய பொன்னே


1347


புடம் படாத் தரமும் விடம் படாத் திறமும்   வடம் படா நலமும் வாய்த்த செம் பொன்னே


1349


மும்மையும் தரும் ஒரு செம்மையை உடைத்தாய்   இம்மையே கிடைத்து இங்கு இலங்கிய பொன்னே


1351


எடுத்து எடுத்து உதவினும் என்றும் குறையாது   அடுத்து அடுத்து ஓங்கும் மெய் அருளுடைப் பொன்னே


1353


தளர்ந்திடேல், எடுக்கின் வளர்ந்திடுவேம் எனக்   கிளர்ந்திட உரைத்துக் கிடைத்த செம் பொன்னே


1355


எண்ணிய தோறும் இயற்றுக என்று எனை   அண்ணி என் கரத்தில் அமர்ந்த பைம் பொன்னே


1357


நீ கேள் மறக்கினும் நின்னை யாம் விட்டுப்   போகேம் என எனைப் பொருந்திய பொன்னே


1359


எண்ணிய எண்ணியாங்கு எய்திட எனக்குப்   பண்ணிய தவத்தால் பழுத்த செம் பொன்னே


1361


விண் இயல் தலைவரும் வியந்திட எனக்குப்   புண்ணியப் பயனால் பூத்த செம் பொன்னே


1363


நால்வகை நெறியினும் நாட்டுக எனவே   பால்வகை முழுதும் பணித்த பைம் பொன்னே


1365


எழுவகை நெறியினும் இயற்றுக எனவே   முழுவகை காட்டி முயங்கிய பொன்னே


1367


எண்ணியபடி எலாம் இயற்றுக என்று எனைப்   புண்ணிய பலத்தால் பொருந்திய நிதியே


1369


ஊழிதோறு ஊழி உலப்பு உறாது ஓங்கி   வாழி என்று எனக்கு வாய்த்த நல் நிதியே


1371


இதம் உற ஊழிதோறும் எடுத்து எடுத்து உலகோர்க்கு   உதவினும் உலவாது ஓங்கு நல் நிதியே


1373


இருநிதி, எழுநிதி, இயல் நவநிதி முதல்   திருநிதி எல்லாம் தரும் ஒரு நிதியே


1375


எவ்வகை நிதிகளும் இந்த மா நிதியிடை   அவ்வகை கிடைக்கும் என்று அருளிய நிதியே


1377


அற்புதம் விளங்கும் அருட்பெரு நிதியே   கற்பனை கடந்த கருணை மா நிதியே


1379


நற்குண நிதியே சற்குண நிதியே   நிற்குண நிதியே சிற்குண நிதியே


1381


பளகு இலாது ஓங்கும் பளிக்கு மா மலையே   வளம் எலா நிறைந்த மாணிக்க மலையே


1383


மதிஉற விளங்கும் மரகத மலையே   வதிதரு பேரொளி வச்சிர மலையே


1385


உரை மனம் கடந்தஆங்கு ஓங்கு பொன் மலையே   துரிய மேல் வெளியில் ஜோதி மா மலையே


1387


புற்புதம், திரை, நுரை, புரை முதல் இலது ஓர்   அற்புதக் கடலே அமுதத் தண் கடலே


1389


இருட் கலை தவிர்த்து ஒளி எல்லாம் வழங்கிய   அருட்பெருங் கடலே ஆனந்தக் கடலே


1391


பவக் கடல் கடந்து நான் பார்த்தபோது அருகே   உவப்பு உறு வளம் கொண்டு ஓங்கிய கரையே


1393


என் துயர்ச் சோடைகள் எல்லாம் தவிர்த்து, உளம்   நன்று உற விளங்கிய, நந்தனக் காவே


1395


சேற்று நீர் இன்றி, நல் தீஞ்சுவை தரும் ஓர்   ஊற்றுநீர் நிரம்ப உடைய பூந்தடமே


1397


கோடைவாய் விரிந்த குளிர்தரு நிழலே   மேடைவாய் வீசிய மெல்லிய காற்றே


1399


களைப்பு அறக் கிடைத்த கருணை நல் நீரே   இளைப்பு அற வாய்த்த இன்சுவை உணவே


1401


தென்னைவாய்க் கிடைத்த செவ் இள நீரே   தென்னை வான் பலத்தின் திருகு தீம் பாலே


1403


நீர்நசை தவிர்க்கும் நெல்லிஅம் கனியே   வேர்விளை பலவின் மென்சுவைச் சுளையே


1405


கட்டுமாம் பழமே, கதலிவான் பழமே,   இட்ட நல்சுவை செய் இலந்தைஅம் கனியே!


1407


புனித வான் தருவில் புதுமையாம் பலமே   கனிஎலாம் கூட்டிக் கலந்த தீஞ் சுவையே


1409


இதம் தரு கரும்பில் எடுத்த தீஞ்சாறே   பதம் தரு வெல்லப் பாகின் இன் சுவையே


1411


சாலவே இனிக்கும் சர்க்கரைத் திரளே,   ஏலவே நாவுக்கு இனிய கற்கண்டே,


1413


உலப்பு உறாது இனிக்கும் உயர் மலைத் தேனே,   கலப்பு உறா மதுரம் கனிந்த கோல் தேனே,


1415


நவை இலாது எனக்கு நண்ணிய நறவே,   சுவை எலாம் திரட்டிய தூய தீம் பதமே,


1417


பதம் பெறக் காய்ச்சிய பசு நறும் பாலே,   இதம் பெற உருக்கிய இளம் பசு நெய்யே,


1419


உலர்ந்திடாது என்றும் ஒருபடித் தாகி   மலர்ந்து நல்வண்ணம் வயங்கிய மலரே


1421


இகம்தரு புவிமுதல் எவ்வுலகு உயிர்களும்   உகந்திட மணக்கும் சுகந்தநன்மணமே


1423


யாழ் உறும் இசையே, இனிய இன் இசையே   ஏழ் உறும் இசையே இயல் அருள் இசையே


1425


திவள் ஒளிப் பருவம் சேர்ந்த நல்லவளே   அவளொடும் கூடி அடைந்த தோர் சுகமே


1427


நாத நல் வரைப்பில் நண்ணிய பாட்டே   வேத கீதத்தில் விளை திருப்பாட்டே


1429


நன்மார்க்கர் நாவில் நவிற்றிய பாட்டே   சன்மார்க்க சங்கம் தழுவிய பாட்டே


1431


நம்புறும் ஆகமம் நவிற்றிய பாட்டே   எம் பலமாகிய அம்பலப் பாட்டே


1433


என் மனக் கண்ணே, என் அருட் கண்ணே,   என் இரு கண்ணே, என் கணுள் மணியே


1435


என் பெரும் களிப்பே, என் பெரும் பொருளே,   என் பெரும் திறலே, என் பெரும் செயலே


1437


என் பெரும் தவமே, என் பெரும் பலனே,   என் பெரும் சுகமே, என் பெரும் பேறே


1439


என் பெரு வாழ்வே, என்தன் வாழ் முதலே,   என் பெரு வழக்கே, என் பெரும் கணக்கே


1441


என் பெரு நலமே, என் பெரும் குலமே,   என் பெரு வலமே, என் பெரும் புலமே


1443


என் பெரு வரமே, என் பெரும் தரமே,   என் பெரு நெறியே, என் பெரு நிலையே


1445


என் பெருங் குணமே, என் பெருங் கருத்தே,   என் பெரும் தயவே, என் பெரும் கதியே


1447


என் பெரும் பதியே, என் உயிர் இயலே,   என் பெரு நிறைவே, என் தனி அறிவே


1449


தோல் எலாம் குழைந்திட, சூழ்நரம்பு அனைத்தும்   மேல் எலாம் கட்டுஅவை விட்டு விட்டி இயங்கிட


1451


என்பு எலாம் நெக்குநெக்கு இயல் இடை நெகிழ்ந்திட,   மென்பு உடைத் தசை எலாம் மெய் உறத் தளர்ந்திட


1453


இரத்தம் அனைத்தும் உள் இறுகிடச் சுக்கிலம்   உரத்திடை பந்தித்து ஒரு திரள் ஆயிட


1455


மடல் எலாம் மூளை மலர்ந்திட, அமுதம்   உடல் எலாம் ஊற்றெடுத்து ஓடி நிரம்பிட


1457


ஒள்நுதல் வியர்த்திட, ஒளிமுகம் மலர்ந்திட   தண்ணிய உயிர்ப்பினில் சாந்தம் ததும்பிட


1459


உள்நகை தோற்றிட உரோமம் பொடித்திடக்   கண்ணில் நீர் பெருகிக் கால்வழிந்து ஓடிட


1461


வாய் துடித்து அலறிட வளர்செவித் துணைகளில்   கூய் இசைப் பொறிஎலாம் கும் எனக் கொட்டிட


1463


மெய் எலாம் குளிர்ந்திட மென்மார்பு அசைந்திடக்   கை எலாம் குவிந்திடக் கால் எலாம் சுலவிட


1465


மனம் கனிந்து உருகிட, மதி நிறைந்து ஒளிர்ந்திட,   இனம் பெறு சித்தம் இயைந்து களித்திட


1467


அகங்காரம் ஆங்காங்கு அதிகரிப்பு அமைந்திடச்   சகம் காண உள்ளம் தழைத்து மலர்ந்திட


1469


அறிவுரு அனைத்தும் ஆனந்தம் ஆயிட,   பொறிஉறும் ஆன்ம தற்போதமும் போயிடத்,


1471


தத்துவம் அனைத்தும் தாம் ஒருங்கு ஒழிந்திட,   சத்துவம் ஒன்றே தனித்துநின்று ஓங்கிட


1473


உலகு எலாம் விடயம் உள எலாம் மறைந்திட,   அலகு இலா அருளின் ஆசை மேல் பொங்கிட


1475


என் உளத்து எழுந்து, உயிர் எல்லாம் மலர்ந்திட,   என் உளத்து ஓங்கிய, என்தனி அன்பே


1477


பொன் அடி கண்டு, அருள் புத்தமுது உணவே,   என் உளத்து எழுந்த என்னுடை அன்பே


1479


தன்னையே எனக்குத் தந்து, அருள் ஒளியால்   என்னை வேதித்த என் தனி அன்பே


1481


என் உளே அரும்பி, என் உளே மலர்ந்து,   என் உளே விரிந்த, என் உடை அன்பே


1483


என் உளே விளங்கி, என் உளே பழுத்து,   என் உளே கனிந்த, என்னுடை அன்பே


1485


தன் உளே நிறைவு உறு தரம் எலாம், அளித்தே   என் உளே நிறைந்த, என் தனி அன்பே


1487


துன்பு உள அனைத்தும் தொலைத்து, எனது உருவை   இன்பு உரு ஆக்கிய என்னுடை அன்பே


1489


பொன் உடம்பு எனக்குப் பொருந்திடும் பொருட்டுஆய்   என் உளம் கலந்த என் தனி அன்பே


1491


தன்வசம் ஆகித் ததும்பி மேல் பொங்கி   என்வசம் கடந்த என்னுடை அன்பே


1493


தன் உளே பொங்கிய தண் அமுது உணவே   என் உளே பொங்கிய என் தனி அன்பே


1495


அருள் ஒளி விளங்கிட, ஆணவம் எனும் ஓர்   இருள் அற, என் உளத்து ஏற்றிய விளக்கே


1497


துன்பு உறு தத்துவத் துரிசு எலாம் நீக்கி நல்   இன்பு உற என் உளத்து ஏற்றிய விளக்கே


1499


மயல் அற, அழியா வாழ்வு மேன் மேலும்   இயல் உற, என் உளத்து ஏற்றிய விளக்கே


1501


இடுவெளி அனைத்தும் இயல் ஒளி விளங்கிட   நடுவெளி நடுவே நாட்டிய விளக்கே


1503


கருவெளி அனைத்தும் கதிர் ஒளி விளங்கிட   உருவெளி நடுவே ஒளிர்தரு விளக்கே


1505


தேற்றிய வேதத் திருமுடி விளங்கிட   ஏற்றிய ஞான இயல் ஒளி விளக்கே


1507


ஆகம முடிமேல் அருள் ஒளி விளங்கிட   வேகமது அறவே விளங்கு ஒளி விளக்கே


1509


ஆரியர் வழுத்திய அருள் நிலை அனாதி   காரியம் விளக்கும் ஓர் காரண விளக்கே


1511


தண்ணிய அமுதே தந்து, எனது உளத்தே   புண்ணியம் பலித்த பூரண மதியே


1513


உய்தர அமுதம் உதவி, என் உளத்தே   செய்தவம் பலித்த திருவளர் மதியே


1515


பதி எலாம் தழைக்கப் பதம் பெறும் அமுத   நிதி எலாம் அளித்த நிறைதிரு மதியே


1517


பால் எனத் தண்கதிர் பரப்பி எஞ்ஞான்றும்   மேல்வெளி விளங்க விளங்கிய மதியே


1519


உயங்கிய உள்ளமும் உயிரும் தழைத்திட   வயங்கிய கருணை மழை பொழி மழையே


1521


என்னையும் பணிகொண்டு என்னுளே நிரம்ப   மன்னிய கருணை மழை பொழி மழையே


1523


உளம்கொளும் எனக்கே உவகை மேற் பொங்கி   வளம்கொளக் கருணை மழைபொழி மழையே


1525


நலம்தர உடல் உயிர் நல் அறிவு எனக்கே   மலர்ந்திடக் கருணை மழைபொழி மழையே


1527


தூய்மை யால் எனது துரிசு எலாம் நீக்கி நல்   வாய்மையால் கருணை மழைபொழி மழையே


1529


வெம் மல இரவு அது விடி தருணம் தனில்   செம்மையில் உதித்து உளம் திகழ்ந்த செஞ்சுடரே


1531


திரை எலாம் தவிர்த்துச் செவ்வியுற்று ஆங்கே   வரை எலாம் விளங்க வயங்கு செஞ்சுடரே


1533


அலகு இலாத் தலைவர்கள் அரசு செய் தத்துவ   உலகு எலாம் விளங்க ஓங்கு செஞ்சுடரே


1535


முன் உறு மலஇருள் முழுவதும் நீக்கியே   என் உள வரைமேல் எழுந்த செஞ்சுடரே


1537


ஆதியும் நடு உடன் அந்தமும் கடந்த   ஜோதியாய் என் உளம் சூழ்ந்த மெய்ச்சுடரே


1539


உள் ஒளி ஓங்கிட உயிர் ஒளி விளங்கிட   வெள் ஒளி காட்டிய மெய் அருட் கனலே


1541


நலம் கொளப் புரிந்திடும் ஞான யாகத்திடை   வலம் சுழித்து எழுந்து வளர்ந்த மெய்க் கனலே


1543


வேதமும் ஆகம விரிவும் பரம்பர   நாதமும் கடந்த ஞான மெய்க் கனலே


1545


எண்ணிய எண்ணிய எல்லாம்தர எனுள்   நண்ணிய புண்ணிய ஞான மெய்க் கனலே


1547


வலம் உறு சுத்த சன்மார்க்க நிலை பெறு   நலம் எலாம் அளித்த ஞான மெய்க் கனலே


1549


இரவொடு பகல் இலா இயல்பொது நடம் இடு   பரம வேதாந்தப் பரம்பரஞ் சுடரே


1551


வரம்நிறை பொது இடை வளர் திருநடம் புரி   பரம சித்தாந்தப் பதி பரஞ்சுடரே


1553


சமரச சத்தியச் சபையில் நடம்புரி   சமரச சத்தியத் தற்சுயஞ் சுடரே


1555


சபை எனது உளம் எனத் தான் அமர்ந்து எனக்கே   அபயம் அளித்த தோர் அருட்பெருஞ்ஜோதி


1557


மருள் எலாம் தவிர்த்து வரம் எலாம் கொடுத்தே   அருள் அமுது அருத்திய அருட்பெருஞ்ஜோதி


1559


வாழி நின் பேர் அருள் வாழி நின் பெரும்சீர்   ஆழி ஒன்று அளித்த அருட்பெருஞ்ஜோதி


1561


என்னையும் பொருள் என எண்ணி, என் உளத்தே   அன்னையும் அப்பனும் ஆகி வீற்றிருந்து,


1563


உலகு இயல் சிறிதும் உளம் பிடியா வகை,   அலகு இல் பேர் அருளால் அறிவது விளக்கிச்,


1565


சிறு நெறி செல்லாத் திறன் அளித்து, அழியாது   உறும் நெறி உணர்ச்சி தந்து, ஒளி உறப் புரிந்து,


1567


சாகாக் கல்வியின் தரம் எலாம் உணர்த்திச்,   சாகா வரத்தையும் தந்து, மேன்மேலும்


1569


அன்பையும் விளைவித்து, அருட் பேர் ஒளியால்   இன்பையும் நிறைவித்து, என்னையும் நின்னையும்


1571


ஓர் உரு ஆக்கி, யான் உன்னிய படி எலாம்   சீர் உறச் செய்து, உயிர், திறம் பெற, அழியா


1573


அருள் அமுது அளித்தனை, அருள் நிலை ஏற்றினை,   அருள் அறிவு அளித்தனை, அருட்பெருஞ்ஜோதி


1575


வெல்கநின் பேர் அருள், வெல்க நின் பெரும்சீர்,   அல்கல் இன்று ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி


1577


உலகு உயிர்த் திரள் எலாம் ஒளி நெறி பெற்றிட   இலகும் ஐந் தொழிலையும் யான் செயத் தந்தனை


1579


போற்றி நின் பேர் அருள் போற்றி நின் பெரும் சீர்   ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி


1581


மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும்   யாவரும் பெற்றிடா இயல் எனக்கு அளித்தனை


1583


போற்றி நின் பேர் அருள் போற்றி நின் பெரும் சீர்   ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி


1585


சித்திகள் அனைத்தையும் தெளிவித்து, எனக்கே    சத்திய நிலைதனைத் தயவினில் தந்தனை,


1587


போற்றி நின் பேர் அருள் போற்றி நின் பெரும் சீர்   ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி


1589


உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எலாம்   விலக, நீ அடைந்து விலக்குக, மகிழ்க,


1591


சுத்த சன்மார்க்க சுகநிலை பெறுக,   உத்தமன் ஆகுக! ஓங்குக! என்றனை


1593


போற்றி நின் பேர் அருள் போற்றி நின் பெரும் சீர்   ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி


1595


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

 

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...